$
Raw Onion Benefits: பிரியாணி போன்ற சாப்பாட்டுடன் பலரும் பச்சை வெங்காயம் சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். ஒருசிலர் வெங்காயம் சாப்பிடுவதை எதிர் தரப்பில் இருப்பவர்கள் அய்யரவாக பார்ப்பார்கள். வெங்காயம் சாப்பிட்ட உடன் அவர்கள் வாயில் ஒருமாதிரியான வாசனை ஏற்படும். அதற்கு பயந்தே பலரும் வெங்காயம் சாப்பிட மாட்டார்கள். ஒருசிலருக்கு வெங்காயம் இல்லாமல் நான்-வெஜ் சாப்பாடே இறங்காது. பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உணவுகளில் பிரதான அங்கமாக இருக்கும் வெங்காயம்

நம் நாட்டில் வெங்காயம் இல்லாமல் எந்த உணவும் நிறைவடையாது. சமைப்பதைத் தவிர, அவை பச்சையாகவும் சாப்பிடப்படுகின்றன. சிலர் வெங்காயத்துடன் சாலட் சாப்பிட விரும்புகிறார்கள். வெங்காயம், வாய்க்கு சுவை தருவது மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் தரும். பிற காய்கறிகள் தரமுடியாத பல நன்மைகளை வெங்காயம் தருகிறது. குறிப்பாக பச்சை வெங்காயத்தை உணவுடன் சாப்பிடுவது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெங்காயத்தில் உள்ள குவெர்செடின் உடலுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வீக்கத்தைக் குறைப்பதிலும், ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வெங்காயத்தில் உள்ள குவெர்செடின் உதவுகிறது. பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க உதவும் 5 ஓட்டப் பயிற்சிகள்
வெங்காயத்தில் குவிந்துள்ள வைட்டமின் நன்மைகள்
அதோடு வெங்காயத்தில் வைட்டமின் சி, பி மற்றும் பொட்டாசியமும் உள்ளது. இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பொட்டாசியம் மிகவும் நல்லது. வெங்காயத்தில் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வெங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.
வெங்காயம் இல்லாமல் நான்-வெஜ் இல்லை
வெங்காயத்தில் வைட்டமின்-சி, வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் தான் நான்-வெஜ் சாப்பிடும் போது வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. தயிர் வெங்காயம், பச்சை வெங்காயம் போன்றவைகளும் உணவுடன் வைக்கப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகள் இரத்த சர்க்கரையை குறைக்கும்.
சிறுநீர் பாதை நோய்த் தொற்று
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை குறைக்க வெங்காயம் நல்ல மருந்து. புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது முகப்பரு மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை குறைக்கிறது. புற்றுநோய்களைத் தடுக்க வெங்காயம் உதவுகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
வெங்காயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் தியோசல்பைட்டுகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. பச்சை வெங்காயம் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. வெங்காயத்தில் கந்தகம் மிக அதிகமாக உள்ளது, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
எலும்புகள் வலுவடையும்
வெங்காயத்திலும் கால்சியம் அதிகம் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகள் உருவாவதற்கு இது அவசியம். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இவை முடி வளர்ச்சிக்கும், பொடுகுத் தொல்லையைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயச் சாற்றை தலையில் தடவி வந்தால், முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
வெங்காயத்தில் இதுபோன்ற பல நல்ல பண்புகள் உள்ளன. இருப்பினும் இதுபோன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட நோய்களால் தீவிரத்தை உணரும் போதோ உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik