வால்நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதில் உள்ளன.
வளர்ச்சிதை மாற்றம் முதல் இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகளை வால்நட்ஸ் கொண்டுள்ளது. வால்நட்ஸை சப்பிட மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
இதையும் படிங்க: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
உடல் எடையை குறைக்க உதவும்
ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 2 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும், 2 கிராம் நார்ச்சத்துக்களும், 4 கிராம் புரதங்களும் நிறைந்துள்ளன. இது உடல் எடையை பருமனாக்காமல் தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்
வால்நட்ஸில் உள்ள மெலடோனின், இரத்தத்தில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. இது தூக்கத்தை தூண்ட உதவுகிறது. இதனை தினமும் சாப்பிடுவது, தூக்கத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
வால்நட்ஸில் பயோட்டின் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கிறன. இது முடி உதிர்வை தடுப்பதுடன், முடியை சேதத்தில் இருந்து காக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வால்நட்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், இதயம் சார்ந்த நோயை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
இதையும் படிங்க: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
விந்தணுக்களை அதிகரிக்கிறது
தினமும் 2 அவுன்ஸ் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் தரம் மேம்படும். குறிப்பாக 21 முதல் 35 வயதுடைய ஆண்களுக்கு விந்தணுக்களின் உருவாக்கத்தை ஆரோக்கியமாக மேம்படுத்த இது உதவுகிறது. மேலும் விந்தணுக்களிம் தரத்தையும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது
தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். மேலும் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோயை தடுக்கிறது
வால்நட்ஸ் சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. வாரம் இரண்டு முறை சுமார் 28 கிராம் வால்நட்ஸ் சாப்பிட்டு வர, டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இது பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.
Image Source: Freepik