Junk Food Effects: ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்ப இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்

  • SHARE
  • FOLLOW
Junk Food Effects: ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்ப இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்


இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் அனைத்திலும் சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் கிடைக்கும். அது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற சுவையுடன் இருப்பினும், அவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாக உள்ளன. ஆனால், இந்த சுவையை ஜங்க் ஃபுட் உணவுகளில் எதிர்பார்க்க முடியாது. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஜங்க் ஃபுட் உணவுகளில் குளூட்டோ மைட், மோனோசோடியம் போன்றவையே நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுகிறது. இதை தவிர்க்க முடியாமல் இன்று பலரும் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?

ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

செயற்கையாக கிடைக்கும் ஜங்க் ஃபுட் உடல் நலத்திற்கு பல்வேறு விளைவுகளைத் தருகிறது. குறிப்பாக குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றனர். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகள் குறித்துக் காண்போம்.

சர்க்கரை நோய் அபாயம்

இந்த ஜங்க் ஃபுட்கள் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஜங்க் ஃபுட்களில் கலோரிகள், ஊட்டச்சத்துகள் போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கிறது. மேலும், ஜங்க் ஃபுட் ஆனது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கானா முக்கிய காரணியாகும்.

அதிக கொழுப்பு நிறைந்தது

எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பின் அளவை ஜங்க் ஃபுட்கள் உயர்த்துகின்றன. அதாவது நிறைவுற்ற கொழுப்பு சார்ந்த உணவு வகைகளில் இந்த ஜங்க் ஃபுட் அடங்கும். உடலில் அதிக அளவில் பெருகும் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்புகள் உடலுக்குப் பல்வேறு வகைகளில் கெடுதலைத் தருகிறது. அதில் முக்கியமாக, உடல் பருமனை அதிகரிக்க ஜங்க் ஃபுட் காரணமாகிறது.

கல்லீரல் நோய்

அதிக சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளில் ஜங்க் ஃபுட்டும் ஒன்று. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் கல்லீரல் நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன், ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை

ஜங்க் ஃபுட்கள் சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதாவது நீரிழிவு நோயைப் போலவே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிப்படைய ஜங்க் ஃபுட்கள் காரணமாகின்றன. எனினும், பாதுகாப்பான உணவு முறைகளையும், வாழ்க்கை முறையையும் கையாளும் போது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தோல் பிரச்சனைகள்

அதிக அளவிலான ஜங்க் ஃபுட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் முகப்பருக்கள் உள்ளிட்ட தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், உள்ளிட்டவை முகப்பருக்களை ஏற்படுத்துகிறது. சமச்சீரான உணவு முறையைக் கையாள்வதன் மூலம் முகப்பரு உள்ளிட்ட பிற தோல் பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.

புற்றுநோய்

ஜங்க் ஃபுட் அதிக அளவிலான சர்க்கரைகள், உப்பு, கொழுப்புகள், கிலோஜூல்கள் நிறைந்த மோசமான உணவாகும். இது புற்றுநோய் ஆபத்தையும் தரும் என்றால் அது மிகையாகாது. அதிக அளவிலான ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்பவர்களுக்கு வயிறு, பெருங்குடல் மற்றும் சுவாசப்புற்றுநோய் ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Benefits of Suvarotti: ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்