Benefits of Suvarotti: ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Benefits of Suvarotti: ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!


சுவரொட்டி என்பது பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் சிலருக்கு ஒவ்வாத உணவாகவே இருக்கிறது. இதன் நன்மைகளை அறிந்துக் கொண்டால் கண்டிப்பாக இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள். அதன்படி சுவரொட்டியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

இரத்த சோகை

ஆட்டு மண்ணீரல் எனப்படும் சுவரொட்டி சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது. இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. இரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் வாரம் இரண்டு முறை இதை உட்கொள்ளலாம். இது பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆட்டு சுவரொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க உதவுகிறது. இதில் அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளன. குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் அவ்வப்போது ஆட்டு நுரையீரலை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். இந்த காலக்கட்டத்தில் பல நோய்த் தொற்றுகள் பரவி வருகிறது. எனவே இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகள் பயக்கும்.

வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பை பெற தாராளமாக ஆட்டு சுவரொட்டியை சாப்பிடலாம். இது தீங்கு விளைவிக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு

சுவரொட்டியில் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும் திறன் அதிகமாக உள்ளது. எனவே சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் சுவரொட்டியை எடுத்துக் கொள்ளலாம். மாதம் 2 முறை என்ற வீதம் சுவரொட்டியை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவாக விடுபடலாம்.

இரும்புச்சத்து தேவை

வெறும் 50 கிராம் சுவரொட்டி என்பது நமது தினசரி இரும்புச்சத்து தேவையில் 100 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. எனவே இரும்புச் சத்து குறைவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தாராளமாக ஆட்டு சுவரொட்டியை சாப்பிடலாம்.

பெருங்குடல் அழற்சி

பெருங்குடல் அழற்ச்சிக்கு ஆட்டு சுவரொட்டி மிக சிறந்த மருந்தாக இருக்கிறது. சுவரொட்டி சாப்பிடுவதால் பெருங்குடல் அழற்சி வராமல் தடுக்க உதவுகிறது.

முடக்கு வாதம்

முடக்கு வதாம் உள்ளவர்களுக்கு சுவரொட்டி மிக பயனுள்ள சிறந்த உணவாகும். சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் முடக்கு வாதத்தை சீராக்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை சுவரொட்டி சாப்பிடலாம்.

சுவரொட்டி என்பது ஆட்டு மண்ணீரல் ஆகும். இது பச்சையாக இருக்கும் போது சுவற்றில் ஒட்டி கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும். இதன்காரணமாகவே, இதை சுவரொட்டி என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

சுவரொட்டியில் ப்ரோட்டின், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி12, ஜிங்க் போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

Image Source: FreePik

Read Next

Papaya Health Benefits: தினமும் பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்