Sugar Problems: சர்க்கரையால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sugar Problems: சர்க்கரையால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?


Causes Of Sugar Disease: இன்று நீரிழிவு நோய் பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த சர்க்கரை நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதாவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பின், அவரது உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். இவ்வாறு இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை காணப்படுவதால சிறுநீர் கழித்த, வியர்வை, தூக்கமின்மை, பதற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்னும் பல பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். சர்க்கரை உள்ளவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்து காண்போம்.

சர்க்கரையால் ஏற்படும் விளைவுகள்

சர்க்கரை உள்ளவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.

கண் சார்ந்த பிரச்சனைகள்

நீரிழிவு நோய் கண்களை மோசமாக பாதிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்களில் வீக்கம் காணப்படலாம். அதன் படி, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்களில் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால், அது நீரிழிவு ரெட்டினோபதி என அழைக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மங்கலான பார்வை அல்லது கண்புரை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

காயம் குணமடைவதில் தாமதம்

நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டால், அதை குணப்படுத்துவது மிகக் கடினமாகும். மேலும், சிறிய கீறல்கள் கூட தோல் குணமடைய நீண்ட நேரத்தை எடுக்கும். நீரிழிவு நோயில் நரம்புகள் சேதமடைவதுடன், இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இதன் காரணமாகவே, நீரிழிவு நோயாளிகளுக்குக் காயங்கள் குணமடைவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் கால் புண்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மத்திய நரம்பு அமைப்பு

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். இது நரம்புகளை சேதப்படுத்தும். இந்த நிலையில் காயத்திற்கு அதிக உணர்திறன் ஏற்படலாம். இது கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இரத்த நாளங்களை சேதமடையச் செய்யலாம். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்புகளில் எரிச்சல் அல்லது வலி ஏற்படலாம். அதாவது சர்க்கரை நோய் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

சிறுநீரக பிரச்சனை

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரக பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். ஏனெனில் மோசமான இரத்த சர்க்கரை அளவும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம். இது நீரிழிவு சிறுநீரகத்தை சேதப்படுத்துகின்றன. இதனால், இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வடிகட்ட உதவும் சிறுநீரகத்தின் திறன் பாதிக்கப்படலாம். இந்த சூழ்நிலையில் சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாது. இவ்வாறு நீரிழிவு நோயால் ஏற்படும் சிறுநீரக நோய்க்கு நீரிழிவு நெஃப்ரோபதி என அழைக்கப்படுகிறது.

அடிக்கடி தொற்று உண்டாவது

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தொற்றுக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளின் இரத்தம் மற்றும் திசுக்களில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, தொற்றுக்கள் வேகமாகப் பரவலாம். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்

Image Source: Freepik

Read Next

Diwali 2023: இந்த பண்டிகையில் சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன?

Disclaimer