Sushi Benefits: சுஷி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sushi Benefits: சுஷி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


பாரம்பரிய ஜப்பானிய உணவாக விளங்கும் சுஷி உலகெங்கிலும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த வியக்கத்தக்க சுஷி உணவுகள் சுவையுடன் கூடிய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இப்போது சுஷி உணவுகளை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.

சுஷி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு சுஷி எவ்வாறு நன்மைகளைத் தருகிறது என்பதைக் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுஷி உதவுகிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள் சுஷியில் நிறைந்துள்ளது. மேலும் இதில் மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?

ஒமேகா 3 நிறைந்தது

பாரம்பரிய சுஷியில் நிறைந்துள்ள ஒமேகா 3 மீன் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இந்த மீன் எண்ணெய்கள் உடலால் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய கொழுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக அளவிலான கொழுப்பைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

தசை பாதுகாப்பிற்கு

சுஷியின் ஆரோக்கியமான நன்மை தசைகள் சீராக இருப்பதை உறுதி செய்வதாகும். எனவே விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள் போன்றோர்கள் உணவில் தொடர்ந்து சுஷியை விரும்பி சேர்த்துக் கொள்வர். தீவிர பயிற்சிக்குப் பின் தசைகளை மீண்டும் உருவாக்குவதில் சுஷி உதவுகிறது. மேலும் இவற்றில் உள்ள புரோட்டீன் முடி வளர்ச்சிக்கும், நகங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

அறிவாற்றலை மேம்படுத்த

சுஷியில் காணப்படும் அதிக அளவிலான ஒமேகா 3, அறிவாற்றலை மேம்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாவசிய கொழுப்புகள் நினைவாற்றலை மேம்படுத்தி மூளையைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits Tips: உலர் பழங்களை இப்படி சாப்பிட்டால் அதீத நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைப்பதில் சுஷி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் உணவுப் பசியைக் குறைப்பதுடன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த சுஷி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மீன் புரதத்தின் சிறந்த மூலமாகும். இவை உடலின் ஆற்றலை சமநிலையில் வைப்பதுடன், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இவை கலோரிகளை வேகமாகக் குறைப்பதுடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சருமத்தில் சுருக்கங்களைத் தடுக்க

சுஷியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், இவை சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் தோல் கட்டமைப்பைப் பாதுகாப்பதுடன் சருமத்தை சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இவை முகச்சுருக்கங்களைத் தவிர்த்து வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது நீண்ட காலத்திற்கு இளமையுடன் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

Image Source: Freepik

Read Next

Macadamia Nuts Benefits: மக்காடமியா நட்ஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Disclaimer