Moongil kuruthu benefits in tamil: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை, வாழ்க்கை முறை காரணமாகவே பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு, சித்தர்களும், முன்னோர்களும் நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான சூட்சுமங்களை விட்டுச் சென்றுள்ளனர். எனினும், நாம் இதை எல்லாம் மதிக்காமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அவ்வாறே கை நிறைய மருந்துகளை மிட்டாய்களைப் போல சாப்பிட்டு வருகிறோம்.
ஆனால், நம் முன்னோர்கள் எத்தனையோ அற்புதமான மூலிகைகள் உணவு பொருட்கள் மற்றும் தாவரங்களை விட்டுச் சென்றுள்ளனர். இவற்றைச் சாப்பிடுவதன் மூலமே நாம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம். அப்படி, நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபட வைத்து நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான தாவரம் ஒன்று தான் மூங்கில் தாவரத்தில் இருக்கக் கூடிய மூங்கில் குருத்து. இதில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sukku Malli coffee: சளியை விரட்டும் சுக்கு மல்லி காபி.! இப்படி தான் செய்யனும்..
மூங்கில் குருத்து
மூங்கில் முளைகள் என்றழைக்கப்படும் மூங்கில் குருத்துகள் இந்தியாவின் சில பகுதிகளில் பல்வேறு உணவுகள் மற்றும் சூப்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு இதில் உள்ள ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இந்த மூங்கில் குருத்து புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் தாதுக்களின் ஆற்றல் மையமாகும். மேலும், இதில் கொழுப்பு மற்றும் சர்க்கரை மிகக் குறைவாக இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும், இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது.
மூங்கில் குருத்து ஊட்டச்சத்துக்கள்
மூங்கில் குருத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள் உள்ளன. இது தவிர, தியாமின், ரிபோஃப்ளேவின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் பினாலிக் கலவைகளுடன் கூடிய ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.
மூங்கில் குருத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடையிழப்புக்கு
மூங்கில் குருத்து குறைந்த கலோரிகளைக் கொண்டவை மட்டுமல்லாமல், அதிகளவிலான நார்ச்சத்துக்களையும் கொண்டதாகும். 1 கப் அளவிலான மூங்கில் குருத்து சுமார் 13 கலோரிகள் மற்றும் அரை கிராம் கொழுப்பு நிறைந்ததாகும். மேலும், இதன் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட காலத்திற்கு முழுமையாக வைக்க உதவுகிறது. இது எடையிழப்பை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: எப்போ பாத்தாலும் கவலை, பதட்டமா இருக்கா? இதை செஞ்சா எந்தக் கவலையும் பறந்தோடிடும்!
சுவாச பிரச்சனைகளை நீக்க
இதில் பரந்த அளவிலான வைட்டமின்கள் மற்றும் பிற கலவைகள் நிறைந்துள்ளது. இவை நுரையீரலை வலுப்படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதற்கு நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற, கழுவிய மூங்கில் குருத்துகளை வெந்நீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை ஆறவைத்து, தேனுடன் கலக்க வேண்டும். இது இயற்கையான சளி நீக்கியாக செயல்படுகிறது. மேலும் இது சுவாச பிரச்சனைகள் மற்றும் பிற சுவாச நிலைகளை எளிதாக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்க
மூங்கில் குருத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளது. ஒரு வாழைப்பழத்தைப் போலவே, ஒரு மூங்கில் தளிர்களில் இரண்டு மடங்கு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவும் செல் மற்றும் உடல் திரவங்களின் முக்கிய அங்கமாகும். மேலும், இது சோடியம் விளைவுகளை எதிர்ப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இவை எலும்புகளை வலுவாக்கவும், தசை வலிமையை உருவாக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
மூங்கில் குருத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும். எனவே இந்த குருத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை குளிர்காலத்தில் உட்கொள்வது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து விலகி இருக்க வைக்கிறது. மேலும், இதன் ஆரோக்கியமான கூறுகள் மூளையின் கூர்மையான செயல்பாட்டை மேம்படுத்தி, நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Tea: குளிர்காலத்தில் செம்பருத்தி பூ டீ குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா? பலன் இதோ!
Image Source: Freepik