$
Health Benefits of Eating Eggs: முட்டை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதம், கால்சியம், துத்தநாகம், ஃபோலேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமாக இருக்க முட்டை சாப்பிடுவதையும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைந்து, தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இங்கே காண்போம்.
கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்

முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகின்றன. இதனால் கண் பார்வை மேம்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முட்டையின் மஞ்சள் கருவில் புரதங்கள், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
மூளை ஆரோக்கியம் மேம்படும்
மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைக்க முட்டை உதவுகிறது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். இதனால் அவர்களின் மூளை ஆரோக்கியம் மேம்படும்.
இதையும் படிங்க: Egg Benefits: தினசரி முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இதய நோய் அபாயம் குறையும்

அமினோ அமிலம், ஹோமோசைஸ்டீன் போன்ற இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க, முட்டையில் உள்ள கோலின் உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
எடையை பராமரிக்க உதவும்
நீங்கள் முட்டை சாப்பிடும் போது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படாது. இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிட தேவை இருக்காது. இதனால் உடல் எடை குறையும்.
சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கும்
முட்டையில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து அழகாக்கும்.
முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் முட்டை சாப்பிடுவதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik