Egg Benefits: தினசரி முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Egg Benefits: தினசரி முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

எடை இழப்புக்கு உதவும் முட்டை

எடை இழப்பு உணவுப் பொருட்கள் பெரும்பாலும் உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றன. முட்டையைச் சத்துக்களின் களஞ்சியம் என்று சொல்லலாம். குறிப்பாக இதில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?

முட்டையில் நிரம்பியுள்ள சத்துக்கள்

ஒரு முட்டையில் 75 கலோரிகள், 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதிலும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மற்ற உணவுகளுக்குப் பதிலாக முட்டையைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுவது சிலருக்கு வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

இதய ஆரோக்கியத்திற்கு முட்டை சாப்பிடலாமா?

முட்டையில் அதிக கொழுப்புச் சத்து உள்ளதாகவும், இதைச் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வாரத்திற்கு ஆறு முட்டைகளைச் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இவை அனைத்தும் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

முட்டையில் உள்ள சத்துக்கள்

முன்பே சொன்னது போல் முட்டையில் பல சத்துக்கள் உள்ளன. இவை எலும்பு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் உடல் வலுவாக இருக்க வேண்டுமென்றால், தினமும் முட்டையை உட்கொள்ள வேண்டும். முட்டையில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முட்டையின் மஞ்சள் கருவில் கலோரிகள், புரதங்கள், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையில் செலினியம் உள்ளது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால், உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, பல உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.

மூளையை கூர்மையாக வைத்திருக்கும்

இதன் தனித்துவமான பண்புகள் மூளையை கூர்மையாக வைத்திருக்கும். அதனால் படிக்கும் குழந்தைகளுக்குத் தினமும் முட்டை ஊட்டுவது நல்லது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தங்கள் மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கச் சாப்பிட வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிகள் முட்டையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புரதம் நிறைந்த உணவுகள்

மஞ்சள் கருவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் உடல் எடை கூடும். அதன்படி நிபுணர்கள். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் போதும் என அறிவுறுத்துகின்றனர். நாம் சாப்பிடும் உணவை மூன்றாகப் பிரித்தால், ஒரு வேளையில் முட்டையும், மற்றொரு உணவில் மெலிந்த இறைச்சியும், மூன்றாவது உணவில் சைவப் புரதமும் இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் வெறும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ள தேவையில்லை, கீரை, வெண்ணெய், காளான், கோஸ், பச்சை பட்டாணி போன்ற புரத உணவுகள் நல்லது என்று கூறப்படுகிறது.

அதிகம் சாப்பிடக் கூடாது

முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், எந்த உணவும் மருந்தாக மாறாமல் விஷமாக மாறும். எனவே கவனமாக இருங்கள். அதேபோல, குறிப்பாக முட்டை சாப்பிடும்போது முதலில் மருத்துவரை அணுகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ப எத்தனை முட்டைகளைச் சாப்பிட வேண்டும் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

முட்டையில் இதுபோன்ற ஏராளமான நன்மைகள் நிறைந்திருந்தாலும், மருத்துவர் சாப்பிட வேண்டாம் என உங்களை அறிவுறுத்தியிருந்தாலோ, ஏதேனும் தீவிரத்தை உணர்ந்தாலோ உடனே மருத்துவர் அணுகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Healthy Bones Tips: வலுவான எலும்புகள் வேண்டுமா? தவிர்க்காமல் இதை செய்து பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்