Healthy Bones Tips: உடல் பாகங்களில் மிக முக்கியமானதாக இருக்கும் எலும்புகளை பராமரிப்பது என்பது மிக முக்கியம். வலுவான எலும்புகளுக்கு அதிக கால்சியம் பிரதானம். தினமும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க பெரிதளவு உதவும். அதேபோல் வலுவான எலும்புகளுக்கு சீரான உணவு மிகவும் அவசியம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம்.
எலும்புகளுக்கு கால்சியம் அவசியம்
கால்சியம் எலும்புகளுக்கு இன்றியமையாத வைட்டமின். பெரியவர்களுக்கு சாதாரண நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 700 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்கு தகுந்தபடியான உணவுகளை உண்பது என்பது மிக முக்கியம். பால், சீஸ், பிற பால் பொருட்கள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், ஓக்ரா கீரைகள், சோயா பீன்ஸ், மீன், இறைச்சி உணவுகள் எலும்புகளை வலுவாக்க பெருமளவு உதவும். இதேபோன்ற பிற உணவுகளையும் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. எலும்புகள் வலுவாக இருக்க தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சனைகள் குறையும். இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைப்பதால் சௌகரியமாகச் சாப்பிடலாம். இது எலும்புகளுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் கொண்டுள்ளது. ஏழைகளின் ஆப்பிளாக கருதப்படும் உணவை பாரபட்சமின்றி அனைவரும் சாப்பிடலாம்.
கீரை
கால்சியம் நிறைந்த கீரைகள் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு கப் வேகவைத்த கீரை உடலுக்கு தினசரி தேவையான கால்சியத்தில் 25 சதவீதம் வரை வழங்குகிறது. இந்த இலைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை உண்பதால் உடலுக்கும் எலும்புகளுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கும். இதேபோல் கீரைகளில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.
நட்ஸ் வகைகள்
நட்ஸ்களிலும் கால்சியம் உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் உள்ளன. மெக்னீசியம் எலும்புகளில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வயதாகும்போதும் எலும்புகள் வலுவாக இருக்க நட்ஸ் சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால், உங்கள் எலும்புகள் வலுவடைவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
பால் பொருட்கள்
பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்புகளின் வலிமைக்கும், அமைப்புக்கும் எந்த வைட்டமின் தேவையோ, அது தினமும் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் அவை கிடைக்கும். பால் பொருட்களை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
ஆரஞ்சு
புதிய ஆரஞ்சு சாறு உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தொடர்ந்து உட்கொள்வதால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும்.
வைட்டமின் டி
நாம் உண்ணும் உணவில் வைட்டமின் டி சரியான அளவில் கிடைப்பது கடினம். அதனால்தான் எலும்பின் வலிமைக்கு சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கும். இதற்கு அதிகாலையில் சூரிய ஒளியில் நடப்பது நல்லது. வைட்டமின் டி தினசரி சூரிய ஒளியின் மூலம் பெறப்படுகிறது. அதேபோல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் சந்தையில் கிடைக்கிறது. சரியான ஆலோசனை பெற்று இதை வாங்கி சாப்பிடலாம்.
இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
இதுபோன்ற உணவுகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தையோ அல்லது புதிதாக எதையும் உட்கொள்ளும் முன் சரியான மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக நல்லது.
image source: freepik