Ayurveda Rules To Get Better Sleep: நாம் ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு தேவையான ஓய்வு அவசியம். உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காத போது, பல்வேறு நோய்களால் பாதிக்கப்படக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், இன்றைய காலத்தில் நாம் பலர் படுத்ததும் தூங்குவதில்லை. நம்மில் உள்ள சில தவறான பழக்கங்கள் நமது தூக்கத்தை வெகுவாக பாதிக்கும்.
சிலர் படுக்கையில் படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள், இன்னும் சிலர் தூங்க முடியாமல் தவிப்பார்கள். சரியான தூக்கம் இல்லை என்றால், அடுத்தநாள் நம்மால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியாது. அடுத்த நாள் முழுவதும் நாம் சோர்வாக உணர்வோம். இரவு நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை பெற ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா கோஹ்லி நமக்கு சில உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : கோடையில் உங்கள் சருமத்தை காக்க வேண்டுமா? உங்களுக்கான ஆயுர்வேத உணவு பட்டியல் இங்கே
அவர் கூறியதாவது, “பகலில் நாம் செய்யும் பல தவறுகள், இரவில் நமது தூக்கத்தை பாதிக்கிறது. நல்ல உறக்கத்திற்கு ஆயுர்வேதத்தில் சில விதிகள் உள்ளனர். அவற்றை நாம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றினால், தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. மேலும், நீங்கள் காலையில் புத்துணர்ச்சியுடனும், நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். நிம்மதியான உறக்கத்திற்கு ஆயுர்வேதம் கூறும் சில உதவிக்குறிப்புகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நல்ல தூக்கத்திற்கான 5 ஆயுர்வேத விதிகள் என்னென்ன?

சூரியன் மறையும் போது தூங்கி, உதிக்கும் போது எழுந்திரு
இந்த நடைமுறை உங்களுக்கு இல்லை என்றால், இரவு உங்கள் அறையை எப்போதும் இருட்டாக வைத்துக்கொள்ளுங்கள். அதே போல, காலை சூரியனின் வெயில் உங்கள் அறைக்கு வருவதையும் உறுதி செய்யுங்கள். இது உங்கள் சர்க்காடியன் தாளத்திற்கு ஏற்ப உங்கள் தூக்க சுழற்சியை பராமரிக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா.? உங்களுக்கான குறிப்புகள் இங்கே
இரவு உணவு சீக்கிரம் சாப்பிடுவது

தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உண்ணுங்கள். மாலை 7 மணிக்கு முன் உணவு உண்பதை உறுதி செய்யுங்கள். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் சிற்றுண்டிகளை உட்கொள்வதையும் தவிர்க்கவும்.
ஸ்க்ரீன்களில் இருந்து விலகி இருங்கள்
இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை மொபைல், லேப்டாப், டி.வி இவற்றில் இருந்து வெளிப்படும் புரா ஊதா கதிர்கள் நமது மூளையை பாதிக்கிறது.
சரியான தூக்க நிலை
ஆயுர்வேதம், நாம் வலது பக்கத்தில் தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இந்த வழியில் தூங்குவது நெஞ்செரிச்சல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை பிரச்சனையில் இருந்தும் இது உங்களை பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்
பகலில் தூங்க வேண்டாம்

ஆயுர்வேதம் கோடை காலத்தைத் தவிர வேறு எந்தக் காலத்திலும் பகல் அல்லது மதியம் தூங்குவதை பரிந்துரைக்கவில்லை. ஏனெனில், இது உடலில் உள்ள சளி மற்றும் பித்தத்தின் சமநிலையை சீர்குலைக்கிறது. நீங்கள் மதியம் தூங்கினால், இரவில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
Pic Courtesy: Freepik