உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்

  • SHARE
  • FOLLOW
உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்

ஆரோக்கியமான செரிமானத்திற்கான ஆயுர்வேத குறிப்புகள்: ஒரு சிலருக்கு கொஞ்சம் அதிகமாக உணவு எடுத்துக்கொண்டாலும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனை அவர்களுக்குப் பல முறை நிகழ்ந்திருக்கலாம். இதன் காரணமாக வயிற்றில் வாயு, மலச்சிக்கல், உப்புசம், குடலில் உப்புசம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?இதற்கு
ஆரோக்கியமற்ற அல்லது மோசமான செரிமானம் ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் திக்ஷா பவ்சர் சவலியா அவர்கள்.

உங்கள் செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யாதபோது, உணவு சரியாக ஜீரணிக்கப்படாமல் போகலாம். இதனால் உணவின் நன்மைகளை உங்களால் பெற முடியாது, மாறாக அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது உங்களுக்கு "செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு என்ன செய்யலாம்? " என்ற கேள்வி எழலாம்.ஆரோக்கியமான செரிமானத்திற்கான 5 ஆயுர்வேத வைத்தியங்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான செரிமானத்திற்கான ஆயுர்வேத குறிப்புகள்

உணவில் 6 சுவைகளைச் சேர்க்கவும்

டாக்டர் திக்ஷா அவர்களின் கூற்றுப்படி, ஆயுர்வேத முறைப்படி, உங்கள் உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் துவர்ப்பு போன்ற 6 சுவைகளும் இருக்க வேண்டும். உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதிலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் இந்த அறுசுவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை எளிதாக்க, ஒரு சிட்டிகை உப்பு, சில துளிகள் எலுமிச்சை சாறு, சிறிது கருப்பு மிளகு போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவைச் சாப்பிடுங்கள்

நீங்கள் இரவு முழுவதும் தூங்கும்போது, ​​​​உங்கள் உடல் தன்னைத்தானே சரிசெய்து மீட்டெடுக்கிறது. இந்த சூழலில் நீங்கள் இரவில் தாமதமாகச் சாப்பிட்டாலோ அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரவு உணவைச் சாப்பிட்டாலோ, அது உங்கள் செரிமான அமைப்பை மந்தமாக்கலாம். உங்கள் உடல், இந்த உணவை வளர்ச்சிதை மாற்றம் செய்து அதிலிருந்து உறிஞ்சும் ஆற்றலைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பான வேலைகள் இல்லாவிட்டால் அது கொழுப்பாக மாறிப் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இரவில் பலவீனமான செரிமானம் காரணமாக, உங்கள் செரிமான அமைப்பால் உணவை எளிதாக ஜீரணிக்க முடியாது. அதனால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகளும் வீணாகின்றன.எனவே, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள். முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை இரவில் எடுத்துக் கொள்ளலாம்.

உணவு வேளைகளுக்கு இடையில் மூலிகை டீ குடிக்கலாம்

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு போன்ற அன்றைய பெரிய உணவுகளுக்கு இடையில் நீங்கள் மூலிகை டீ குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.மேலும் ஆரோக்கியமற்ற, இனிப்பு உணவுகளுக்கான பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

மதியம் நிறைவான உணவை உண்ணுங்கள்

நாளின் மிகப்பெரிய, நிறைவான உணவைப் பகலில் சாப்பிட வேண்டும். ஏனெனில் பகல் வேளையில் உங்கள் செரிமான திறன் அதி வேகமாகச் செயல்படுகிறது. இந்த நேரத்தில் எதைச் சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணமாகும். இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம், உங்கள் உடலுக்குப் போதுமான நன்மைகள் கிடைக்கும்

ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை உண்ணுங்கள். துரித, பதப்படுத்தப்பட்ட, அதிக காரமான, வறுத்த மற்றும் அதிக உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைக் குறைக்கவும். இது தவிர, வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். முக்கியமாக மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள்.

image source: freepik

Read Next

Disclaimer

குறிச்சொற்கள்