Doctor Verified

Ayurvedic Weight Gain: ஒல்லியா இருக்கீங்களா? எடை அதிகரிக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Ayurvedic Weight Gain: ஒல்லியா இருக்கீங்களா? எடை அதிகரிக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சி செய்யுங்க


Ayurvedic Tips For Weight Gain: இன்று உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இடையில், சிலர் உடல் எடையை அதிகரிக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். எனினும், ஆரோக்கியமான மற்றும் சீரான எடையைப் பராமரிப்பது மிக முக்கியமானதாகும். அந்த வகையில் மிகவும் எடை குறைவாகவும், அதிக எடையுடனும் இருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆயுர்வேத முறைப்படி, ஆரோக்கியமான மற்றும் நிலையான முறையில், பெண்களின் உடல் எடையை அதிகரிக்க சில இயற்கை மருந்துகள் மற்றும் நடைமுறைகள் வழங்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் உடல் எடை அதிகரிப்பு குறித்து பீகார், தர்பங்கா, PHC, இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), மருத்துவர் கணேஷ் சவுத்ரி கூறியுள்ளார். பாரம்பரிய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், சமநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆயுர்வேதத்தில் ஒரு தனிநபரை மூன்று முதன்மை உடல் வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை வாத, பித்த, மற்றும் கபா ஆகும். எடை அதிகரிப்பதற்கான காரணிகளைத் தீர்மானிக்க ஒருவரின் உடல் வகையை அடையாளம் காண்பது அவசியமாகும். ஏனெனில், அவற்றின் அணுகுமுறை வேறுபடலாம் எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

உடல் எடை அதிகரிக்க ஆயுர்வேத வைத்தியம்

இதில் உடல் எடையை அதிகரிக்க உதவும் சில ஆயுர்வேத வைத்திய முறைகளைக் காணலாம்.

மூலிகை சப்ளிமென்ட்ஸ்

ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள் மற்றும் சப்ளிமெண்டுகள், உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. அதன் படி, அஸ்வகந்தா, ஷதாவரி மற்றும் கோக்சுர் போன்றவை பொதுவாக பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் ஆகும். இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. எனினும், இந்த சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்தும் முன் ஆயுர்வேத பயிற்சியாளரை அணுகுவது நல்லது.

கோக்சுர் எனப்படும் கோக்ரு, ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க அமைப்புகளுக்கான ஒரு டானிக் ஆகும். இது இரத்த சுத்திகரிப்பு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆரோக்கியம், உகந்த எடை அதிகரிப்பு, செரிமானம், ஹார்மோன் சமநிலை போன்றவற்றிற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது வலிமை மற்ற்றும் ஆற்றலை அதிகரிப்பதுடன், உடலுக்குத் தேவையான அளவு நிரப்பும் ஆயுர்வேத மூலிகையாகும். இது மட்டுமல்லாமல், வீரியம், ஆயுட்காலம் மற்றும் தசை திணிவை அதிகரிக்கிறது.

வழக்கமான உணவு நேரங்கள்

வழக்கமான உணவு அட்டவணையின் படி, உணவு உண்ணுதலைக் கடைபிடிக்க வேண்டும். சீரான நேரத்தில் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை காக்க சில வழிகள்...

இனிப்பு மற்றும் ஊட்டமளிக்கும் உணவுகள்

ஆயுர்வேதத்தில், உணவில் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு சுவைகள் வலியுறுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதற்கும், உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது. அதன் படி, வாழைப்பழங்கள், பாதாம், பேரிச்சை, அத்திப்பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

சீரான உணவு

ஆயுர்வேதத்தில் உடல் வகையைப் பொறுத்து சீரான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடல் எடையை அதிகரிக்க உதவும். இதில் பெண்கள் உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், தானியங்கள் போன்ற கலோரி அடர்த்திமிக்க உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆயுர்வேதத்தில் உடல் எடை அதிகரிக்க சிறந்த வழியாக உணவில் நெய் சேர்ப்பதாகும்.

சூடான உணவுகள்

உணவில் சூடான உணவுகள், மூலிகை டீகளை சேர்த்துக் கொள்வது, உடலில் வெப்பம், செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இது உடல் எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

மன அழுத்தத்தைக் கையாளுதல்

அதிகளவு மன அழுத்தத்துடன் இருப்பது, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம். மன அழுத்தத்தைக் குறைப்பதம் மூலம், ஆரோக்கியமான பசியை மேம்படுத்த முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

போதுமான தூக்கம்

தரமான மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது ஒருவரது உடல் எடையை சீராக வைக்க உதவும். ஏனெனில், சீரற்ற தூக்க முறைகள் ஒருவரது பசியையும், வளர்ச்சிதை மாற்றத்தையும் பாதிக்கும்.

அதிக உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது

அளவுக்கு அதிகமான உடல் செயல்பாடுகள் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள், குறைந்த தீவிர உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

ஆயுர்வேதத்தில் பெண்கள், உடல் எடை அதிகரிப்பதற்கான முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. அதன் படி, உணவுத் தேர்வுகள், வாழ்க்கை முறை நடவடிக்கைகள் போன்றவற்றை வலியுறுத்துகிறது. இதன் இலக்கு எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஆரோக்கியமான மற்றும் சீரான உடலை அடைவதாகும். மேலும் ஆயுர்வேதத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது இயற்கையான மற்றும் நிலையான வழியில் அதிகரிப்பதைக் குறிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Remedies for Stress Pimples: மன அழுத்தத்தால் ஏற்படும் பருவை போக்க சிறந்த வழிகள்!

Image Source: Freepik

Read Next

Cherry Juice Benefits: செர்ரி ஜூஸின் ஆயுர்வேத நன்மைகளை ஆராய்வோம் வாருங்கள்!

Disclaimer