Vitamin Deficiency: உஷார்! இந்த வைட்டமின்களின் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் இது தான்!

  • SHARE
  • FOLLOW
Vitamin Deficiency: உஷார்! இந்த வைட்டமின்களின் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் இது தான்!

வைட்டமின்களின் குறைபாட்டால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்

முடி உதிர்தல்

முடி உதிர்வு பிரச்சனை இன்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரும்பு, துத்தநாகம், லினோலிக் அமிலம் அல்லது நியாசின் (வைட்டமின் பி3) குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஹீமோகுளோபின் உற்பத்தியில் அதன் பங்கு காரணமாக ஒரு பொதுவான காரணமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே, முடி உதிர்தல் பிரச்சனையைத் தவிர்க்க கீரை, பீன்ஸ், பருப்பு மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நைட் அடிக்கடி பாத்ரூம் போறீங்களா.? இது தான் காரணம்.!

வாய் புண்கள்

வாயின் மூலைகளில் பிளவுகள் அல்லது வலிமிகுந்த வாய்ப் புண்கள் போன்றவற்றைச் சிலர் சாதாரணமாகக் கருதுகின்றனர். ஆனால், இது வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்) குறைபாட்டைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற பி வைட்டமின்கள் அல்லது இரும்புச்சத்து குறைபாடுகளும் இது போன்ற அறிகுறிகளையே ஏற்படுத்துகிறது. எனவே உணவில் வைட்டமின் பி2 மற்றும் மற்ற பி வைட்டமின்கள் நிறைந்த பால், இறைச்சி, மீன் மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

மோசமான இரவு பார்வை

இரவு பார்வை குறைபாடு, கண்களின் வெள்ளை நிறம் போன்றவை வைட்டமின் A குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இது வெள்ளை நிற வளர்ச்சிகளான பிட்டோட்டின் புள்ளிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான தோல், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்பார்வை போன்றவற்றை பராமரிக்க வைட்டமின் ஏ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகளைத் தடுக்க வைட்டமின் ஏ நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கு, பால் பொருட்கள் மற்றும் கேரட் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஈறுகளில் இரத்தப்போக்கு

பொதுவாக, ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு மோசமான பல் சுகாதாரமும் ஒரு காரணமாக அமைகிறது. மேலும் இது வைட்டமின் சி குறைபாடும் காரணமாகவும் ஏற்படலாம். ஏனெனில், ஆரோக்கியமான ஈறுகளை பராமரிக்கும் கொலாஜன் தொகுப்புக்கு வைட்டமின் சி மிகவும் அவசியமாகும். ஈறுகளில் இரத்தக் கசிவுடன், உலர்ந்த செதில் தோல், அடிக்கடி காயம் உண்டாகும் போன்றவையும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளைத் தடுக்க வைட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Copper Side Effects: உஷார்! இவங்க மறந்தும் காப்பர் பாட்டில் தண்ணீரைக் குடிக்கக் கூடாது!

சோர்வு

உடலில் வைட்டமின் டி, இரும்பு மற்றும் வைட்டமின் பி12 போன்ற குறைபாடு காரணமாக தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக திசுக்களை அடையும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைகிறது. இது சோர்வுக்கான பொதுவான காரணமாகும். இந்த குறைபாடுகளை எதிர்த்துப் போராட, உணவில் முட்டை, பால் பொருள்கள், மெல்ந்த இறைச்சிகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கை, கால்களில் உணர்வின்மை

கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை ஏற்படுவது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின் பி12 ஆரோக்கியமான நரம்பு செல்களை பராமரிக்கவும், டிஎன்ஏ உற்பத்திக்கும் உதவுகிறது. இது உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வுக்கு வழிவகுக்கிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக சோர்வு மற்றும் அறிவாற்றல் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே உணவில் போதுமான B12 உட்கொள்ளலை அதிகரிக்க இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற வைட்டமின் குறைபாட்டால் உடலில் இந்த அறிகுறிகள் தென்படுகிறது. இதனைத் தவிர்க்க, அறிகுறிகளுக்கு ஏற்ற வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Is fasting good: இவர்கள் எல்லாம் மறந்தும் விரதம் இருக்க கூடாது! ஏன் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

நைட் அடிக்கடி பாத்ரூம் போறீங்களா.? இது தான் காரணம்.!

Disclaimer

குறிச்சொற்கள்