Vitamin c deficiency: உடலில் வைட்டமின் சி குறைபாட்டால் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Vitamin c deficiency: உடலில் வைட்டமின் சி குறைபாட்டால் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?


What are the symptoms of vitamin c deficiency: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அதன் படி, பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் சி சத்துக்கள் சில இயற்கையான மூலங்களின் மூலம் எளிதில் கிடைக்கும். எனினும், சிலருக்கு வைட்டமின் சி குறைபாடு ஏற்படலாம். ஏனெனில் இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்து இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்ய முடியாது. எனவே நாள்தோறும் உணவில் வைட்டமின் சி மூலத்தைச் சேர்க்க வேண்டும். உடலில் வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

அதீத சோர்வு

நமக்கு பல்வேறு காரணங்களால் சோர்வு ஏற்படலாம். உடலில் சோர்வு உண்டாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வைட்டமின் சி குறைபாடு அமைகிறது. தொடர்ந்து சோர்வாக இருப்பின், மற்றும் உணவு அல்லது வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பின், உடலில் குறைந்த வைட்டமின் சி அளவுகள் இருப்பதைக் குறிக்கிறது. எனினும், சோர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், சோர்வுக்கான மூலத்தைக் கண்டறிய வேண்டும். இந்த சமயத்தில் அதிக வைட்டமின் சி உடலுக்குத் தேவையா என்பதை அறிய மருத்துவரிடம் சென்று இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fasting: உயர் BP நோயாளிகள் இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் இருக்கலாமா? அது நல்லதா?

சுவாச தொற்றுக்கள்

வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இவை ஆரோக்கியமான கொலாஜன் உருவாவதையும், காயங்களைக் குணப்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது. இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொள்ளாத போது, அவற்றை உடல் ஏங்குகிறது.

எளிதாக காயப்படுவது

உடலில் வழக்கத்தை விட அதிகளவு காயங்களைக் கவனித்தால், வைட்டமின் சி குறைபாடு இருக்கலாம். இவை இரத்த உறைதலை ஊக்குவித்து, உடலின் திசுக்களை வலுவாக பராமரிக்கிறது. உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான வைட்டமின் சியை உடல் உறிஞ்சுவதற்கு பல வாரங்கள் ஆகலாம். இது தவிர, உடலில் சிராய்ப்பு ஏற்படுவதற்கு இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் காரணமாகும். எனவே வைட்டமின் சி குறைபாடு இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு விரிவான பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனையைப் பெறுவது அவசியமாகும்.

மூட்டு வலி

வைட்டமின் சி குறைபாட்டிற்கான பொதுவான அறிகுறிகளில் மூட்டு வலியும் அடங்கும். இது முழங்கால்கள் மற்றும் இடுப்பு போன்ற எந்த மூட்டுகளையும் பாதிக்கலாம். ஆனால், இது ஏன் ஏற்படுகிறது தெரியுமா? வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்கிறது. இவை மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே போதுமான அளவு வைட்டமின் சி கிடைக்காத போது மூட்டுகள் பாதிக்கப்படுகிறது. இது வலிமிகுந்த மூட்டுகள், விறைப்பு, வீக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Plastics Affect Hormones: நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஹார்மோன்களை பாதிக்குமா? இதோ பதில்!

சரும பிரச்சனைகள்

உடலில் போதுமான அளவு வைட்டமின் சி கிடைக்கவில்லை எனில், சில வெளிப்படையான தோல் மாற்றங்களைக் கவனிக்கலாம். இந்த குறைந்தளவு வைட்டமின் சி காரணமாக, சருமத்தில் சிவப்பு அல்லது நிறமாற்றம் தோன்றலாம். சிராய்ப்பு பொதுவானதாகும். குறிப்பாக, முழங்கைகளின் உட்புறங்களில் காயங்கள் பொதுவாக இருக்காது. இதனால், வாயின் மூலைகளைச் சுற்றி விரிசல் அல்லது வறட்சி ஏற்படலாம். வைட்டமின் சி சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது. இந்நிலையில் வைட்டமின் சி குறைபாடு கொலாஜன் உற்பத்தியைத் தடுத்து, சரும பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது.

பல் ஈறுகளில் இரத்தக்கசிவு

வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, ஈறு நோயைத் தடுக்க உதவுகிறது. இந்த குறைந்த அளவிலான வைட்டமின் சி, நோயாளிகளுக்கு ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இது ஸ்கர்வி நோயை உருவாக்குகிறது. இது வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படுவதாகும். எனவே ஈறு நோயை நிராகரிக்க, பல் மருத்துவரை அணுகலாம். அதே சமயம், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.

இவை அனைத்தும் வைட்டமின் சி அறிகுறியால் உடலில் ஏற்படும் நோய்கள் ஆகும். எனவே வைட்டமின் சி குறைபாட்டைத் தவிர்க்க, வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு நாள் முழுக்க AC-ல இருந்தா உடலுக்கு என்னாகும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Fasting: உயர் BP நோயாளிகள் இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் இருக்கலாமா? அது நல்லதா?

Disclaimer