Vitamin K Deficiency Foods: உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு சத்துப்பொருள் வைட்டமின்கள் ஆகும். இவை உடலின் வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் வைட்டமின்கள் பற்றாக்குறையால் முக்கிய வளர்ச்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகலாம். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வைட்டமின்கள் பற்றாக்குறையினை நீக்க வைட்டமின்கள் சார்ந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்படுத்த வைட்டமின் கே சத்துகள் உதவுகின்றன. இவை உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இப்போது வைட்டமின் கே நிறைந்த சில உணவுகளைக் காணலாம்.
வைட்டமின் கே நிறைந்த உணவுகளின் பட்டியல்
வைட்டமின் கே குறைபாடுகளை நீக்க வைட்டமின் கே நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை காய்கறிகள்
வைட்டமின் கே நிறைந்த உணவு வகைகளில் காய்கறிகளைச் சாப்பிடுவது மிக முக்கிய மற்றும் சிறந்த வழியாகும். இது ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான வழியாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் பச்சை இலைக் காய்கறிகள் வைட்டமின் கே வளமாக நிறைந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. முட்டைக்கோஸ், கீரை, கடுகு கீரை உள்ளிட்ட பல்வேறு கீரைகளில் வைட்டமின் கே சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதில் மற்ற இலைக் கீரைகளுடன் ஒப்பிடுகையில், அரை கப் அளவிலான கொலார்ட் மற்றும் டர்னிப் கீரைகள் 420mcg முதல் 530mcg வரை வைட்டமின் கே உள்ளது. மேலும், ஒரு கப் பச்சைக் கீரையில் 145mcg அளவு வைட்டமின் கே சத்துகள் உள்ளன.
பால் பொருள்கள் (சீஸ்)
பாலாடைக்கட்டியில் உள்ள வைட்டமின் கே சத்துகளின் வகை செயலாக்கத்தின் நிலை மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இதில் கடினமான பாலாடைக் கட்டிகளில் 43mcg முதல் 65mcg வரையிலான வைட்டமின் கே சத்துகள் நிறைந்துள்ளது.
முழு கொழுப்புகளைக் கொண்ட பாலாடைக்கட்டி மற்றும் இன்னும் பிற பால் பொருள்கள், குறைந்த கொழுப்பு வகைகளை விட வைட்டமின் கே சத்துகளே நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
சோயாபீன்ஸ்
வைட்டமின் கே நிறைந்த ஆதாரங்களில் சோயாபீன்ஸூம் உள்ளது. சமைத்த பருப்பு வகைகளில் ஒரு கப் 47.2mcg வைட்டமின் கே சத்துகள் உள்ளன. சோயாபீன்ஸ் எண்ணெயை விட சோயாபீன்ஸை அதிகமாக பயன்படுத்தலாம். மற்ற தாவர வகை எண்ணெயை விட, சோயாபீன் எண்ணெயில் வைட்டமின் கே சத்துகள் நிறைந்துள்ளது.
முந்திரி
முந்திரியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 9.6mcg அளவிலான வைட்டமின் கே உள்ளது. முந்திரி ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 18 முழு முந்திரிகளைக் குறிக்கிறது. வைட்டமின் கே சத்துகளை உறிஞ்சிவதற்கு உதவக்கூடிய ஆரோக்கியமான கொழுப்பு வகைகளைக் கொண்டுள்ளது. எனவே, முந்திரிகளை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் கே சத்துகளைப் பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
அவகேடோ
அவகேடோ அல்லது வெண்ணெய் பழங்கள், வைட்டமின் கே நிறைந்த பழமாகும். ஒரு சராசரி அளவு அவகேடோ பழம் சுமார் 32mcg-ஐ வழங்குகின்றன. இந்த வெண்ணெய் பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் கே சத்துகளை உறிஞ்ச உதவுகின்றன.
முட்டை
முட்டையில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் கே2 சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளது. மூன்று முட்டைகளைச் சாப்பிடும் போது 17mcg வைட்டமின் கே சத்துகள் கிடைக்கும். கீரைகளைத் தனியாக சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் கே சத்துக்கள் கிடைக்கப் பெறும். இதனுடன், முட்டையையும் சேர்த்து முட்டைக் கீரை ஆம்லெட் தயாரிப்பது அதிக அளவிலான வைட்டமின் கே சத்துகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
Image Source: Freepik