Respiratory Disease Types And Its Prevention: பொதுவாக மழைக்காலத்தில் நோய்த்தொற்றுக்களின் பரவல் சற்று அதிகமாகவே காணப்படும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுவாச நோய்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படும். இந்த ஈரப்பதத்தால் கிருமிகள் வளர ஆரம்பிக்கிறது. இதனால் எளிதில் நோய்வாய்ப்படும் அபாயம் ஏற்படலாம். சுவாசிக்கும் போது, காற்றில் இருக்கும் கிருமிகள், சுவாசப்பாதை வழியாக உடலுக்குள் நுழைந்து சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, இந்த சுவாச நோய்த்தொற்றுக்கள் பெரும்பாலும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதனால் சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அந்த வகையில் மழைக்காலத்தில் எந்தெந்த சுவாச நோய்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இதைத் தவிர்க்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து லக்னோவிலுள்ள டஃபெரின் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சல்மான் கான் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Prevention Tips: மழையில் நனைந்த பிறகு ஏன் சாதாரண நீரில் குளிக்க சொல்வது ஏன் தெரியுமா?
மழைக்காலத்தில் பரவும் சுவாச நோய்த்தொற்றுக்கள்
மழைக்காலத்தில் நோய்த்தொற்றுக்கள் சுவாசப்பாதை வழியாக பரவுவதால் என்னென்ன நோய் அபாயம் உண்டாகும் என்பதைக் காண்போம்.
காய்ச்சல்
இன்ஃபுளுயன்சா என்பது ஒரு தொற்று வைரஸ் ஆகும். இந்த சுவாச நோயானது பருவமழையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நோயால் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காய்ச்சல் ஏற்படும் போது அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நோயைத் தவிர்க்க தடுப்பூசி எடுக்க வேண்டியது அவசியமாகும். ஒருவர் இருமல் அல்லது தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.
ஜலதோஷம்
பருவமழைக் காலத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் சளிப் பிரச்சனை பாதிக்கிறது. மதிப்பீட்டின் படி, குழந்தைகள் ஒரு வருடத்தில் 6 முதல் 12 முறை ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம், பெரியவர்கள் வருடத்திற்கு 2 முதல் 4 முறை ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பருவகாலத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சளி பிடிக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம். எனவே இந்த நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.
தொண்டை அழற்சி
குரல்வளையில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படுவது ஃபரிங்கிடிஸ் அல்லது தொண்டை அழற்சி என அழைக்கப்படுகிறது. தொண்டையின் ஒரு பகுதியாக குரல்வளை விளங்குகிறது. இது மூச்சுக்குழாய்க்கு மேற்பகுதியிலும், மூக்கு மற்றும் வாய்க்கு பின்னாலும் உள்ளது. இந்த தொண்டை அழற்சியானது பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படுகிறது. இவை இரண்டுமே பருவமழையின் போது ஏற்படும் நோய்களுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகிறது. தொண்டையில் வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதைக் கண்டால் தொண்டை அழற்சி இருப்பதைக் குறிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: இரத்த அழுத்தத்திற்கு கல் உப்பு சாப்பிடலாமா? இதன் நன்மைகள் இங்கே!
கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி
பொதுவாக மூச்சுக்குழாய் அழற்சியில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று கடுமையான மற்றும் மற்றொன்று நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி. இந்த கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியில், இருமலுடன் லேசான காய்ச்சலும் ஏற்படலாம். இது குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையானது மழைக்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்த்தொற்றுக்களைக் குறிக்கிறது. இந்த பிரச்சனை ஏற்படும் போது அவர்களின் சுவாசக்குழாயில் வீக்கம் ஏற்படலாம். இதனால் சுவாச மண்டலம் பலவீனமடைகிறது. இந்த அதிகப்படியான சளி உருவாக்கத்தின் காரணமாக சுவாசக் குழாயில் அடைப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது.
நிமோனியா
நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களால் நிமோனியா ஏற்படுகிறது. இந்த நிமோனியா பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற ஒட்டுண்ணிகளால் ஏற்படலாம். பொதுவாக இந்த நிம்மோனியா பருவமழையிலேயே அதிகரிக்கிறது. இது சளி மற்றும் இருமலை ஏற்படுத்தலாம். இதில் நோயாளி சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் நிமோனியா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு PCV தடுப்பூசி ஷாட் மிகவும் நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.
மழைக்கால சுவாச நோய்களைத் தடுக்கும் முறைகள்
- மழைக்காலத்தின் போது தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். அதாவது கைகளை சுத்தம் செய்யாமல் எதையும் சாப்பிடக்கூடாது. சானிடைசர் மட்டுமல்லாமல் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- வீட்டில் புதிதாக சமைத்த உணவை உண்ண வேண்டும். இந்த காலகட்டத்தில், ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மழைக்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது அவசியம். இந்த காலநிலையில் சரியான நேரத்தில் ஓய்வெடுப்பதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப்பட்டு, பருவ கால நோய்களைத் தவிர்க்கலாம்.
- இந்த பருவமழைக்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இது போன்ற ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் மழைக்கால சுவாச நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Toothpick Side Effects: பற்களில் சிக்கிய உணவுகளை எடுக்க குச்சி யூஸ் பண்றீங்களா? அப்ப இத முதல்ல பாருங்க
Image Source: Freepik