Vitamin C Foods: வைட்டமின் சி சத்து நிறைந்த இந்த உணவெல்லாம் கட்டாயம் எடுத்துக்கணும்

  • SHARE
  • FOLLOW
Vitamin C Foods: வைட்டமின் சி சத்து நிறைந்த இந்த உணவெல்லாம் கட்டாயம் எடுத்துக்கணும்


Best Foods High In Vitamin C: அன்றாட உணவில் சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் வைட்டமின் சி-யை உட்கொள்வது இதய நலன் ஆரோக்கியத்துடன் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் சி குறைபாட்டை நீக்கலாம். அந்த வகையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை வாழ்வில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழம் ஒன்றில் 83 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் சி கிடைக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds During Summer: வெயில்ல உடம்பு சூட்டைத் தணிக்க சாப்பிட வேண்டிய விதைகள்

பப்பாளி

இது நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பின், ஒரு கப் அளவிலான பப்பாளியில் 88 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மறதி நோய் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் பழமாகும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவாகும். அரை கப் அளவிலான வேக வைத்த ப்ரோக்கோலியில் 51 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.

கொத்தமல்லி

8 கிராம் அளவிலான கொத்தமல்லியில் 10 மில்லிகிராம் அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவிலான கொத்தமல்லியை எடுத்து உட்கொள்வதன் மூலம் வைட்டமின் சி சத்துக்களைப் பெறலாம்.

எலுமிச்சைப்பழம்

எலுமிச்சை பழம் பலவிதமான சக்திகளை அடக்கி வைத்துள்ளது. எலுமிச்சைச் சாற்றில் உள்ள கூறுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக பணிபுரிகிறது. ஒரு முழு எலுமிச்சைப் பழத்தில் 45 மில்லிகிராம் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட பிறகு மூலிகை டீ குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கிவி பழம்

56 மில்லிகிராம் அளவிலான கிவி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதன் சிறப்பியல்பான பண்புகள், ஸ்ட்ரோக் மற்றும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன், வெள்ளையணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

இது பணக்கார பழம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இது தற்போது மிக சுலபமாகவும், மலிவாகவும் இந்த பழம் கிடைக்கிறது. 166 கிராம் அளவிலான ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது 97 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் காணப்படுகிறது.

கொய்யாப்பழம்

இது பல்வேறு ஊட்டச்சத்து நலன்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இசோப்பேன் நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உண்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ஒரு கொய்யாப்பழம் 145 மில்லிகிராம் அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இந்த வகையான வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Calcium Foods: மீனைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

White Bread vs Brown Bread: பிரவுன் பிரெட் ஆரோக்கியமானதா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

Disclaimer