Simple hydration tips for hot and humid days: பருவமழை ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியான உணர்வைத் தரக்கூடியதாகும். ஆனால் மழைக்காலத்தில் நாம் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த பருவ காலத்தின் போது நீரிழப்பு அதிகரிக்கும் அபாயத்தையும் அளிக்கிறது. மேலும், வியர்வை மற்றும் திரவ இழப்புக்கு வழிவகுக்கும் கோடை வெப்பத்தைப் போலல்லாமல், மழைக்காலமும் நீரிழப்புக்கு வழிவகுக்கக்கூடியதாகும். மழைக்காலத்தைப் பொறுத்த வரை நாம் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும்.
முதன்மையாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை குடல் தொற்றுகள் காரணமாக, இந்த காலத்தில் நீரிழப்பு ஏற்படலாம். இந்த சமயத்தில் இது போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதால், நீரேற்றம் குறித்த விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. பருவமழையை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கடக்க உதவுவது மட்டுமல்லாமல், அனைவரும் நீரேற்றத்திற்கான குறிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் பருவமழைக் காலத்தில் நீரிழப்பைத் தடுக்க பின்பற்ற வேண்டிய குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் உங்கள் உடலை நீரிழப்புக்கு உள்ளாக்கும் உணவுகளை நிபுணர் பட்டியலிட்டுள்ளார்..
நீரிழப்பைத் தடுக்க பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
தண்ணீர் குடிப்பதை தினசரி பழக்கமாக்குவது
பலர் செய்யும் ஒரு பொதுவான தவறாக, அன்றாட செயல்பாடுகளிலோ அல்லது விளையாட்டுகளிலோ மூழ்கி இருக்கும்போது தண்ணீர் குடிப்பதை மறப்பது ஆகும். குறிப்பாக மழைக்காலங்களில் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு 30–45 நிமிடங்களுக்கும் சிறிய சிப்ஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கம் நீரிழப்பை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. இதை அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்வதன் மூலம் பரபரப்பான மழைக்காலத்திலும் கூட, நீரேற்றம் வழக்கத்தின் இயல்பான பகுதியாக மாறுவதை உறுதிசெய்ய முடியும். இவை உடலை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நீரிழப்பு அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது
நீரிழப்பு எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். பொதுவாக நீரிழப்பு காரணமாக உடல் திடீரென சக்தி இல்லாமல், சோர்வாக உணரலாம். உதடுகள் மற்றும் வாய் போன்றவை வறண்டு போகலாம். நீர்ச்சத்து குறைபாட்டினால் எரிச்சல் ஏற்படும் அசௌகரியம் போன்றவை நீரிழப்பினால் ஏற்படக்கூடியதாகும். இது தவிர, சிறுநீர் கழித்தல் குறைதல் மற்றும் அடர் மஞ்சள் சிறுநீர் போன்ற பிரச்சனைகளும் உண்டாகலாம். எனவே இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து திறம்பட நிர்வகிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஐஸ் வாட்டர் குடித்தால் எடை ஏறுமா? - அச்சச்சோ நிபுணர் சொல்லும் பக்கவிளைவுகளை தெரிஞ்சிக்கோங்க!
அன்றாட உணவின் மூலம் நீரேற்றம் பெறுவது
நாம் உண்ணும் உணவிலிருந்து நீரேற்றத்தைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? மழைக்காலத்தில் நீரேற்றமாக இருக்க அன்றாட உணவில் நீர் நிறைந்த பழங்களை உணவில் சேர்ப்பதும் அடங்கும். இவை நம் உடலை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கான மதிப்புமிக்க தேர்வாகும்.
அதன் படி, தர்பூசணி மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிக நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நீரேற்றமாக இருக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு உட்கொள்வது புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது. இது தவிர, தயிர் அல்லது மற்ற சில பழங்களைப் பயன்படுத்தி ஸ்மூத்திகளைத் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
தேவைப்படும்போது ORS-ஐ எடுத்துக் கொள்வது
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை எதிர்கொள்ளும் போது, திரவங்கள் மட்டுமல்லாமல், முக்கிய எலக்ட்ரோலைட்டுகளும் இழக்கப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த தீர்வாக வாய்வழி நீரேற்ற தீர்வுகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உகந்த நீரேற்றத்திற்காக உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் ORS-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதே சமயம், அதிக சர்க்கரை உள்ளவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மழைக்கால நீரேற்றத்திற்கு இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழப்பைத் தடுப்பதுடன், பருவகால நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தண்ணீரை எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவு குடிப்பது உடலுக்கு நல்லது தெரியுமா?
Image Source: Freepik