பொதுவாக முளைக்கட்டிய உணவுகள் (Sprouted Foods) உடலுக்கு மிகவும் நன்மை தருவதாகவே நாம் எண்ணி வருகிறோம். இந்த உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நொதிகள் மற்றும் புரோட்டீன் அதிகம் காணப்படுவதால், பலரும் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது எடை குறைக்கும் நோக்கில் இதனைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால், எல்லா முளைத்த உணவுகளுமே உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக சில காய்கறிகள் முளைக்கட்டும்போது, அதில் உருவாகும் ரசாயனங்கள் நம் உடலுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை உடல்நல நிபுணர் டிம்பிள் ஜங்டா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவின் வாயிலாக பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, கீழ்க்காணும் மூன்று வகையான முளைத்த காய்கறிகளை நாம் தவிர்க்கவேண்டும்.
முளைக்கட்டிய இந்த 3 காய்கறிகளை தவிர்க்கவும்
1. முளைக்கட்டிய வெங்காயம்
வீட்டில் அதிக நாட்கள் வைக்கப்பட்ட வெங்காயங்களில் முளைகள் காணப்படுவது பொதுவானது. ஆனால், இவை N-propyl disulfide என்ற ஆல்கலாய்டை (alkaloid) உற்பத்தி செய்கிறது. இது ஹீமோலிடிக் அனீமியா (Hemolytic Anemia) எனப்படும் ஒரு இரத்த சோகை நோயை உண்டாக்கும். இதனால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மற்றும் வயிற்றுவலி போன்ற சிரமங்கள் ஏற்படலாம். எனவே, முளைத்த வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம்.
2. முளைக்கட்டிய பூண்டு
வெங்காயத்தைப் போலவே, பூண்டிலும் அதிக சல்பர் (Sulfur) இருக்கின்றது. பூண்டு முளைக்கும்போது உருவாகும் ஆல்கலாய்டுகள், இரைப்பை மற்றும் குடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், இரத்தத்தில் ஆக்ஸிஜனின் சரிவை தூண்டும். இது நம் உடல் உறுப்புக்களின் செயல்பாட்டை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே முளைத்த பூண்டை சமைத்து சாப்பிட வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய 7 பழங்கள் – டாக்டர் பால் பரிந்துரை!
3. முளைத்த உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் முளைகள் வளர்ந்தால், அது Glycoalkaloids என்ற ரசாயனத்தை அதிகமாக உற்பத்தி செய்யும். இது நம் நரம்பியல் அமைப்பை பாதிக்கும் நிலை. இதனால் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவை ஏற்படலாம். எனவே உருளைக்கிழங்கு முளைத்தால், அதை சமைத்து சாப்பிடுவது தவறானது.
View this post on Instagram
இறுதிச்சொல்..
முளைத்த வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்றவற்றை, சமைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது என்பதை நிபுணர் டிம்பிள் எச்சரிக்கிறார். இனிமேல் சமையலுக்கு பயன்படுத்தும் முன், இந்த காய்கறிகளில் முளை வந்துள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.