$
Child Liver Disease Symptoms And Treatment: குழந்தைகளுக்கு பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதேயாகும். அதிலும் குறிப்பாக, தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவு போன்றவற்றால் குழந்தைக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குழந்தைகள் வெளியில் ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்வதையே விரும்புவர். இதனை அதிகம் எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பு மற்றும் கல்லீரலின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை தொடர்ந்து வெளியில் சாப்பிடுவது எதிர்காலத்தில் கல்லீரல் தொற்று மற்றும் பிற கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கலாம்.
இந்த சூழ்நிலையில், பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு வீட்டிலேயே தயார் செய்யப்படும் உணவுகளைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குக் கல்லீரல் நோய் இருப்பது சில அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது. மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் தொற்றுக்கான சிகிச்சை குறித்து காணலாம். இது குறித்து இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் ஆண்ட்ராலஜி துறை முதுநிலை ஆலோசகர் டாக்டர் என். சுப்ரமணியம் அவர்கள் குழந்தைகளில் கல்லீரல் நோய்களில் காணப்படும் அறிகுறிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Kids Toothbrushing Tips: குழந்தையின் வயதுக்கு ஏற்ப சரியாக பல் துலக்குவது எப்படி?
குழந்தைகளில் கல்லீரல் நோய்க்கான காரணங்கள்
குழந்தைகளுக்குக் கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு பல வகையான மரபணு காரணிகள் காரணமாகிறது. இதில் ஒன்று ஆல்பா 1 ஆன்டிட்ரிப்சின் குறைபாட்டை உள்ளடக்கியதாகும். இதில் ஆல்பா 1 ஆன்டிட்ரிப்சின் எனப்படும் புரதம் கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் செல்கிறது.
இந்த உறுப்பு சீர்குலைவதால் குழந்தைக்கு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகலாம். இது தவிர, கல்லீரல் தொற்றுக்கு ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி போன்ற நோயெதிர்ப்பு மண்டல கோளாறுகள் மற்றும் மரபணு மாற்றங்களால் இந்த கல்லீரல் நோய் ஏற்படலாம்.

குழந்தைக்குக் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள்
குழந்தைகளுக்குக் கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனை
கல்லீரல் தொடர்பான பிரச்சனை ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு உணவு செரிமானம் அடைவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும் இது வயிற்று வலியை உண்டாக்கலாம். இது தவிர, குழந்தைக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Headaches in Children: உங்க குழந்தை அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறாரா? அப்போ இது தான் காரணம்!
குறைந்த எலும்பு அடர்த்தி
கல்லீரல் பிரச்சனை இருப்பதால் குழந்தைகளுக்கு எலும்பு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால், எலும்பு அடர்த்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டு எலும்புகள் உடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
பசியிழப்பு
குழந்தைக்கு கல்லீரல் அல்லது வேறு சில தொற்றுக்களால், பசியை இழக்கின்றனர். இதனால், குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்துக்களை பெறுவதில் சிக்கல்கள் உண்டாகலாம். இது அவர்களின் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்துவதுடன், எடையையும் வேகமாகக் குறைக்கிறது. இது கல்லீரல் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும்.
மஞ்சள் நிற மலம்
குழந்தைக்கு கல்லீரல் தொற்று மற்றும் வீக்கம் உண்டாவது, குழந்தையின் மலத்தின் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது. இது பிலிரூபின் அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மஞ்சள் காமாலை
கல்லீரல் நோய்த்தொற்று காரணமாக, குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதில், கல்லீரலில் பிலிரூபின் அளவு பாதிக்கப்படுவதால் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இதில் குழந்தையின் சருமம் மற்றும் கண்களின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Benefits: குழந்தைகளுக்கு பூசணிக்காய் கொடுப்பதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள்!
குழந்தைகளுக்கு கல்லீரல் தொற்றுக்கான சிகிச்சை முறை
சில முக்கிய காரணங்களின் அடிப்படையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் நோய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
கல்லீரல் செயல்பாடு சோதனை
இந்த சோதனையில் கல்லீரல் செயல்பாடு சோதிக்கப்படுகிறது. அதாவது கல்லீரல் என்சைம்கள் சோதிக்கப்படுகின்றன.
கல்லீரல் பயாப்ஸி
குழந்தையின் கல்லீரலில் கடுமையான சிக்கல்கள் ஏதேனும் இருப்பின், அவரது திசுக்களில் ஆய்வு செய்யப்படும். இதற்கு கல்லீரலில் இருந்து ஊசியின் உதவியுடன் திசுக்கள் சேகரிக்கப்படுகிறது. இது கல்லீரல் பயாப்ஸி என அழைக்கப்படுகிறது.
அல்ட்ராசவுண்ட்
கல்லீரல் பிரச்சனைகள் அல்ட்ராசவுண்ட் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் மருத்துவர் கல்லீரல் நோய்க்கான முக்கிய காரணத்தைக் கண்டறிந்து மருந்துகளைப் பரிந்துரைப்பர். இதில் கல்லீரலில் அழற்சி ஏற்படின், அழற்சி எதிர்ப்பு மருத்துகள் கொடுக்கப்படுகிறது. ஈரல் அழற்சியைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Child Healthy Brain: குழந்தைகளின் மூளை வளர்ச்சி வலுவாக கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுங்க!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version