Chutney Recipes: என்ன சட்னி செய்யலாம்னு யோசனையா? சூப்பர் ரெசிபி இதோ…

  • SHARE
  • FOLLOW
Chutney Recipes: என்ன சட்னி செய்யலாம்னு யோசனையா? சூப்பர் ரெசிபி இதோ…


மென்மையானது முதல் கரடுமுரடானது வரை, அனைத்து உணவுகளுக்கு சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ். இந்தியாவில் மட்டுமே பல்வேறு சட்னிகள் உள்ளன. இதில் சிலவற்றை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

கார சட்னி

தேவையான பொருட்கள்

மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 20 முதல் 25 வரை
பூண்டு - 15
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அது சூடானதும், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

தற்போது இந்த கலவையை மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைக்கவும். அவ்வளவு தான் கார சட்னி ரெடி.

இதையும் படிங்க: Benefits Of Dosa: நீங்க தோசை பிரியரா? இதன் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 3
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அது சூடானதும், எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறிய உடல் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி வெந்த உடல், பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இறுதியாக உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

மேற்கூறிய கலவைகளை மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சட்னி ரெடி.

உளுந்து சட்னி

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
துருவிய தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெள்ளை உளுந்து சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கவும்.

இதனுடன் காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் மீண்டும் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

இதனை அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

Read Next

Eating Eggs: முட்டை சாப்பிட ஆரோக்கியமான வழி எது தெரியுமா? இப்படி சாப்பிட்டு பாருங்க பாஸ்!

Disclaimer

குறிச்சொற்கள்