Smoking Side Effects: புகைப்பிடித்தால் எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும்?

  • SHARE
  • FOLLOW
Smoking Side Effects: புகைப்பிடித்தால் எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும்?


புகைப்படித்தால் ஏற்படும் பிரச்சனைகள்

இதனால் பலர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமாகிவிடுவார்கள். ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு பாதி வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், புகைபிடித்தல் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

எதிர்கால குழந்தைகளை பாதிக்கும்

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கர்ப்பகால சிகிச்சையின் வெற்றியையும் அது பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கான சில கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர். அது இதோ, நீங்கள் கருத்தரிக்க முயற்சித்தும், கருத்தரிக்க முடியாமல் போனால், பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. இப்படிச் செய்வதால் அவர்களுக்கு நல்ல உணர்வு ஏற்படும், அப்படிப்பட்டவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் விழுந்தால், அதை விட்டுவிடுவது நல்லது. இல்லையெனில் கருத்தரிப்பது கடினமாக இருக்கும்.

சுற்றுப்புற நபர்களுக்கும் ஆபத்து

அதேபோன்று செயலற்ற புகைப்பழக்கமும் மிகவும் ஆபத்தானது. Passive smoking என்றால் நீங்கள் புகைபிடிக்காமல் புகையை உள்ளிழுத்தால் அதுவும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது, இது செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் எனப்படும். இதுவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உங்கள் அருகில் இருக்கும் உங்கள் மனைவியோ அல்லது வேறு பெண்ணோ உங்களது புகை அவர்களை சென்றடைவது கருத்தரிக்கும் வாய்ப்பு குறைக்கும், இது கர்ப்பப்பையையும் பாதிக்கிறது.

மலட்டுத் தன்மை பிரச்சனை

புகைபிடித்தல் ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆண்களில் விந்து தரம் குறைகிறது. அதேபோல் விந்தணு எண்ணிக்கையும் குறைகிறது. புகைபிடிக்கும் ஆண்கள் அதை நிறுத்தியவுடன் தங்கள் நிலைக்கு திரும்பவும் வாய்ப்புள்ளது. எனவே புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது.

உயர் இரத்த அழுத்தம்

கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பது பிறப்பு குறைபாடுகள், வளர்ச்சி கட்டுப்பாடுகள் மற்றும் தாயின் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் குறைவாக புகைபிடித்தாலும் கூட. இது பிறக்காத குழந்தையை பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஆண், பெண் இருபாலரும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கண் பார்வை கோளாறு

புகைப்படிப்பதால் கண்களில் உள்ள Blindspot இருட்டுப்புள்ளி அதிகமாகின்றது. புகைப்பிடிப்பதால் விழித்திரையில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன் குறையும். கண்களில் உள்ள இரத்த நாளம் சுருங்கி ஆபத்தான் பின்விளைவை சந்திக்க நேரும். அதேபோல் மேல் குடலின் கீழ்ப்பகுதியில் புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கால்களில் உள்ள இரத்த நாளம் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும்.

இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்

இதுபோன்ற பல விளைவுகளை சந்திக்க வைக்கும் புகைப்பழக்கத்தை கைவிட்டுவிடுவது என்பது பல நன்மைகளை வழங்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image Source: Freepik

Read Next

Sleep Disorder: நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்