திருச்சி மாவட்டம் தென்னூர் ஆழ்வார்பேட்டை பகிதியில் உள்ள இரண்டு பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகப்பு துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. புகாரின் பேரில் மாவட்ட நியமன அலுவர்லர் டாக்டர் ரமேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது அங்கு பதுக்கி வைத்திருந்த முட்டைகளை சோதனை செய்தனர். அதில் 2 பேகரிகளிலும் சுமார் 8000 அழுகிய முட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அழுகிய முட்டைகளை கொண்டு தாயார் செய்திருந்த சுமார் 250 கிலோ உணவு பொருட்கள் அழிக்கப்பட்டது. இதனுடன் 8000 முட்டைகளும் அழிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டு பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 2 பேக்கரிகளுக்கும் சீல் வைத்தனர். இது போன்று அழுகிய முட்டைகள் மற்றும் காலாவதியான பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபு எச்சரித்துள்ளார்.
அதிகம் படித்தவை: Heart Healthy Foods: இரும்பு போல் இதயம் வலிமையாக இதை சாப்பிடவும்..
அழுகிய முட்டையை கண்டுபிடிப்பது எப்படி.?
நீர் சோதனை
முட்டை நல்லதாக இருந்தால் அது நீரில் மிதக்காது. நீங்கள் முட்டையை நீரில் போட்டால், அது மெல்லமாக அடியில் சென்று அமர்ந்துவிடும். ஆனால் அதே சமையம் முட்டை அழுகியதாக இருந்தால், அவை நீரில் மிதக்கும். முட்டை நீரில் மிதக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி மிதந்தால் அவை கெட்டுப்போனவை.
நிறம்
முட்டை நன்றாக உள்ளதா.? அல்லது அழுகியதா.? என்பதை, முட்டையின் நிறத்தை வைத்தே நீங்கள் கண்டறியலாம். அது எப்படி.? நீங்கள் முட்டையை உடைத்து ஊற்றும் போது, மஞ்சள் கருவில், திட்டு திட்டாக சிவப்பு புள்ளிகள் இருந்தால், அவை கெட்டுப்போனவை என்று அறியலாம். இது வேதி வினை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
வாசனை
முட்டையின் வாசனையை வைத்தே, அவை நன்றாக உள்ளதா.? அல்லது அழுகிவிட்டதா.? என்பதை அறியலாம். முட்டையில் லேசான மண் வாசனை இருந்தால் அது நல்ல முட்டை. துர்நாற்றம் வீசினால் அது கெட்ட முட்டை. அழுகிய முட்டையில் சல்பரின் வாசம் வரும்.
குலுக்கி பார்க்கவும்
நீங்கள் வாங்கி வந்த முட்டை நல்ல முட்டையா என்பதை அறிய, முட்டையை காதருகே வைத்து மெதுவாக குலுக்கவும். எந்த ஒரு சத்தமும் இல்லை என்றால் அது நல்ல முட்டை. நீங்கள் முட்டையை குலுக்கும் போது சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை.
அதிகம் படித்தவை: 13 வயது சிறுவனின் உயிரைப் பறித்த DJ மியூசிக்! உரத்த ஒலியால் ஏற்பட்ட விபரீதம்
அழுகிய முட்டையை சாப்பிட்டால் என்ன ஆகும்.?
அழுகிய அல்லது அசுத்தமான முட்டைகளை சாப்பிடுவது உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அழுகிய முட்டைகளை வலுவான கந்தக வாசனையால் எளிதில் அடையாளம் காண முடியும். அசுத்தமான முட்டைகளில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. அவை ஷெல்லுக்குள் ஊடுருவுகின்றன.
இருப்பினும், சால்மோனெல்லாவை அடையாளம் காண்பது தந்திரமானதாக இருக்கலாம், ஏனெனில் புதிய முட்டைகள் கூட சால்மோனெல்லாவால் மாசுபடுத்தப்படலாம் . அதிர்ஷ்டவசமாக, சரியான கையாளுதல் மற்றும் சமையல் நடைமுறைகளால் இதைத் தவிர்க்கலாம்.
சால்மோனெல்லாவால் அசுத்தமான முட்டைகளை நீங்கள் சாப்பிட்டால், உணவு நச்சு அறிகுறிகளை நீங்கள் உருவாக்கலாம். இது பொதுவாக 6 மணிநேரம் மற்றும் 6 நாட்களுக்குள் நுகர்ந்த பிறகு தொடங்கும். சால்மோனெல்லா ஃபுட் பாய்சனின் அறிகுறிகள் பின்வருமாறு:
- காய்ச்சல்
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- வயிற்றுப் பிடிப்புகள்

சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகள் பொதுவாக 4-7 நாட்களுக்கு நீடிக்கும், இதன் போது ஏராளமான திரவங்களை குடிக்க வேண்டியது அவசியம். பின்வரும் அறிகுறிகளை நீங்கள் உருவாக்கினால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்:
- அதிக காய்ச்சல்
- வயிற்றுப்போக்கு
- 2 நாட்களுக்கு மேல் வாந்தி
- வறண்ட வாய்
- தலைச்சுற்றல்
- கருமையான சிறுநீர்
- குறைந்த சிறுநீர் கழித்தல்
- அதிக தாகம்
- நீரிழப்பு
Image Source: Freepik