13 வயது சிறுவனின் உயிரைப் பறித்த DJ மியூசிக்! உரத்த ஒலியால் ஏற்பட்ட விபரீதம்

  • SHARE
  • FOLLOW
13 வயது சிறுவனின் உயிரைப் பறித்த DJ மியூசிக்! உரத்த ஒலியால் ஏற்பட்ட விபரீதம்

அதிலும் DJ மியூசிக் என்ற பெயரில் அதிக சத்தத்துடன் இசை கேட்பது, நடனம் ஆடுவது போன்ற பழக்கங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக இருப்பினும், நாளடைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் டிஜே மியூசிக் இசை கேட்டு நடனம் ஆடிய போதே உயிரிழந்துள்ளார். இது மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ளூர் திருவிழா கொண்டாட்டத்தின் போது நடந்துள்ளது. இதில் அந்த சிறுவன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள் இங்கே!

DJ மியூசிக் காரணமாக மாரடைப்பு?

இந்நிலையில், அவரது உடல்நிலையை அறியாமல் சிறுவனின் தாயார் கதறி அழுதுள்ளார். சிறுவனுக்கு இதய நோய் இருந்துள்ளது. ஆனால் அவர் நன்றாக இருக்கிறார் என தாயார் கூறியுள்ளார். அந்த சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரைச்சல் ஒலி வரம்பீடு வைக்கப்பட்டுள்ளது.

DJ மியூசிக் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படுமா?

இதில் மற்றொரு சம்பவமாக, கடந்த மாதத்தில் ராய்ப்பூரில் 40 வயது நபர் ஒருவர் டிஜே மியூசிக்கை அதிக உரத்த சத்தம் வைத்து கேட்டதன் காரணமாக, மூளைச்சாவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும் அந்த நபர் உயர் இரத்த அழுத்தம், பிற நோய்கள், விபத்துக்கள் அல்லது உடல் ரீதியான தாக்குதலின் வரலாறு ஏதும் இல்லாமல் நிகழ்ந்த இந்த அசாதாரண நிகழ்வால் மருத்துவர் திகைத்துப் போனார்கள். மேலும் அவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறிகையில், அருகில் டிஜே அதிக சத்தத்துடன் நோயாளி கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ear Phone: அழுக்கான இயர்ஃபோனை மற்றவர்களுக்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?

அதிக DJ ஒலியின் வெளிப்பாடு

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மூளை ரத்தக்கசிவுக்கும் டிஜே ஒலிக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும், DJ இன் அதிக அளவு உயர் இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் எனவும், இது மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும் அதிக DJ ஒலியின் வெளிப்பாடு காரணமாக உடலில் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். இதில் முக்கியமாக செவிப்புலன் தொடர்பான எட்டாவது மண்டை நரம்பு சேதமடைவதால் நிரந்தர காது கேளாமை பிரச்சனை ஏற்படலாம்.

DJ-யின் அதிக டெசிபல் ஒலி இதயத் தாளத்தை சீர்குலைத்து, அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உரத்த சத்தத்தால் நிரந்தர காது கேளாமை பிரச்சனையைச் சந்திக்கின்றனர். குறிப்பாக இதய நோய் அபாயம் உள்ளவர்களுக்கு இது உயிர் பறிபோகும் நிலையை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இதய நோய் அபாயம், காது கேளாமை, மூளை பாதிப்பு உள்ளிட்ட ஏராளமான உடல்நல பிரச்சனைகள் DJ மியூசிக் காரணமாக ஏற்படுகிறது. மேலும் இந்த அதிக உரத்த ஒலியால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்றோர் அவதியுறுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க டிஜேக்களுக்கு கடுமையான நேரம் மற்றும் ஒலி வரம்புகள் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Headphone Users: இயர்போன் பயனர்களே உஷார்! அதிக சத்ததுடன் மியூசிக் கேட்டால்..

Image Source: Freepik

Read Next

Cancer Rate in India: மக்களே கவனம்! இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு: இப்படியே போன 2045க்குள்?

Disclaimer

குறிச்சொற்கள்