Weight Loss Tips (Lose 10 Kg Weight:): உடல் பருமன் பிரச்சனை என்பது உலகளவில் பெருமளவு அதிகரித்து வரும் சிக்கலாக மாறி வருகிறது. இப்போதெல்லாம் மெலிந்த உடலுடன் 30 வயதுக்கு மேல் இருப்பவர்களை காண்பது அரிதாக உள்ளது. உடல் பருமன் பிரச்சனையை பலரும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதை தடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை.
அதிகரித்து வரும் உடல் பருமன் காரணமாக, உடலில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பல நேரங்களில் உடல் பருமன் உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆரம்பக் காரணமாகிறது. நீரிழிவு நோய் முதல் இதய நோய் வரை, அனைத்தும் ஏற்பட உடல் பருமன் பிரச்சனையும் முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க: Weight Loss By Ayurveda: காலையில் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை கிடுகிடுன்னு குறையுமாம்...!
அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சனை
உடல் பருமன் காரணமாக, பல நேரங்களில் ஒருவர் அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறார். பல சமயங்களில், உடலில் உடல் பருமன் அதிகரிப்பதால் ஒருவர் மன ரீதியாகவும் தொந்தரவு அடையத் தொடங்குகிறார்.
உடல் எடையை குறைக்க பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலருக்கு இதன் மூலம் பலன் கிடைப்பதில்லை சிலருக்கு பலன் கிடைக்கக் கூடும். உடல் எடையை குறைக்கும் பலர் தோல்வி அடையக் காரணம் பாதியிலேயே இந்த முயற்சியை கைவிடுவது தான். முறையான ஆலோசனையின் பேரில் சில வழிகளை பின்பற்றினால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
30 நாட்களில் 10-15 கிலோ எடை குறைக்க என்ன செய்வது?
டயட் பயிற்சியாளரும் எடை இழப்பு நிபுணருமான துளசி நிதின் தனது இன்ஸ்டா பக்க்தில் இதுகுறித்து பதவிட்ட கருத்துக்களை பார்க்கலாம், அவர் பதிவிட்ட இந்த பதிவு சமூகவலைதளங்களில் பெருமளவு வைரலாகியது. அதில், 10-15 கிலோவை கூட எளிதாகக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதுவும் 30 நாட்களில் இதை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளதுதான் இந்த வீடியோ வைரலானதுக்கு காரணம்.
30 நாட்களுக்கு 10-15 கிலோ எடையைக் குறைக்க ஒரு வாரம் முழுக்க என்ன சாப்பிட வேண்டும் என்ற உணவு முறையை பகிர்ந்துள்ளார். இந்த உணவு முறை ஆரோக்கியமானது என்றாலும் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் முறையாக மருத்துவரை சந்தித்த பின்பே இதுபோன்ற பரிந்துரை உணவுமுறைகளை பின்பற்றவும். சரி, 30 நாட்களில் உடல் எடையை குறைக்க வாரம் முழுவதும் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க வாரம் முழுவதும் சாப்பிட வேண்டிய உணவுமுறை
30 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பினால் ஒரு வாரம் முழுவதும் இந்த வகை உணவுகளை சாப்பிடுவது என்பது பெரிதும் உதவியாக இருக்கும். இதுகுறித்து டயட் நிபுணர் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
திங்கட்கிழமை உணவு முறை
காலை உணவு (காலை 10 மணி): 2 துண்டுகள் பிரவுன் ரொட்டியுடன் 2 வேகவைத்த முட்டைகள்
மதியம் 1-2 மணி: 1 சப்பாத்தி + பச்சை பட்டாணி கறி + சாலட் + தயிர் (1 கிண்ணம்)
மாலை சிற்றுண்டி (5 மணி): இனிப்பு சோள சாட்
இரவு உணவு (7-8 மணி): கிரில் செய்யப்பட்ட சிக்கன் மார்பக பகுதி (150 கிராம்) + வறுத்த காய்கறிகள் (1 கிண்ணம்)
செவ்வாய் கிழமை உணவு முறை
காலை உணவு: 2 ராகி தோசை மற்றும் 1/2 கிண்ணம் சாம்பார்
மதிய உணவு: மீன் கறி (150 கிராம்) பிரவுன் ரைஸ் + வேகவைத்த காய்கறிகள் + தயிர்
மாலை சிற்றுண்டி: 2 பேரீச்சம்பழம் + 5 பாதாம்
இரவு உணவு: 1 சப்பாத்தி + இறால் கறி (150 கிராம்) + வதக்கிய காய்கறிகள்
புதன்கிழமை உணவு முறை
காலை உணவு: 2 முட்டை ஆம்லெட் மற்றும் வதக்கிய காய்கறிகள்
மதிய உணவு: 1 சப்பாத்தி + சன்னா கறி + சாலட் + மோர்
மாலை சிற்றுண்டி: வறுத்த மக்கானா
இரவு உணவு: ஒரு கிண்ணம் பாதாம் கிச்சடி + பெரிய கிண்ண சாலட்
வியாழக்கிழமை உணவு முறை
காலை உணவு: 1 கிண்ணம் இரவு உணவு துண்டுகளாக்கப்பட்ட பழங்களுடன் ஓட்ஸ்
மதிய உணவு: சாதம் (3/4 கிண்ணம்) + மீன் கறி + சாலட்
மாலை உணவு: வறுக்கப்பட்ட பனீர் (100 கிராம்)
இரவு உணவு: 1 முட்டை ஆம்லெட் + வேகவைத்த காய்கறிகள்
வெள்ளிக்கிழமை உணவு முறை
காலை உணவு: 2 இட்லி + 1/2 கிண்ண சாம்பார்
மதிய உணவு: 1 சப்பாத்தி + சிக்கன் கறி (150 கிராம்) + சாலட் (1/2 கிண்ணம்)
மாலை உணவு: வேர்க்கடலை சாட்
இரவு உணவு: 1 கிண்ணம் வேகவைத்த ப்ரோக்கோலியுடன் சிக்கன் சூப்
சனிக்கிழமை உணவு முறை
காலை உணவு: பச்சை சட்னியுடன், இட்லி
மதிய உணவு: சிக்கன் கறி (150 கிராம்) + பழுப்பு அரிசி + கீரை சாலட்
மாலை உணவு: வறுத்த சன்னா
இரவு உணவு: 1 சப்பாத்தி + ஏதேனும் காய்கறிகள் + வறுக்கப்பட்ட மீன் (150 கிராம்)
ஞாயிற்றுக்கிழமை உணவு முறை
காலை உணவு: சிக்கன் சாண்ட்விச், கோதுமை ரொட்டி
மதிய உணவு: காய்கறி சாலட்டுடன் சிக்கன் பிரியாணி (1/2 கிண்ணம்)
மாலை சிற்றுண்டி: 1 கப் பால் தேநீர்/காபி
இரவு உணவு: வறுத்த பனீர்/கலவை காய்கறிகள் சாலட்
மேலும் படிக்க: மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத உணவுகள் இங்கே
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலையில் குடிக்க வேண்டிய பானம்
காலை பானமாக இதை உட்கொள்வது மிக நல்லது. காலை எழுந்தவுடன் என்ன குடிக்கிறோம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியம். இந்த காலை பானங்கள் உங்கள் வாழ்க்கை முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தேனுடன் 1 கிளாஸ் எலுமிச்சை சாறு
- 1 கிளாஸ் வேகவைத்த ஜீரா தண்ணீர்
- ஆப்பிள் சைடர் வினிகருடன் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீர்
- நெல்லிக்காய் சாறு
- ஏதேனும் காய்கறி சாறு
image source: freepik