Fri Sep 11, 2026 | 10:43 PM IST

Doctor Verified

தலை ஈரமா இருந்தாலே சளி பிடிக்குமா? மருத்துவர் கார்த்திகேயன் சொன்ன உண்மையை கேட்டு ஷாக் ஆகிடுவீங்க!

தலை ஈரமா இருந்தாலே சளி பிடிக்கும் என்பது உண்மையா? மருத்துவர் கார்த்திகேயன் கூறும் விஞ்ஞான விளக்கம் இதோ! ரைனோ வைரஸ் தான் சளிக்கு காரணம், தலை ஈரத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்கிறார் நிபுணர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை தான் சளி. பருவ மாற்றம், தூசி, ஒவ்வாமை, மழையில் நனைவது போன்ற காரணங்களால் சளி ஏற்படுவதாக பலர் நம்புகின்றனர். அதேபோல், “தலை ஈரமா இருந்தாலே சளி பிடிக்கும்” என்ற நம்பிக்கையும் தலைமுறைகள் முழுவதும் பரவி வருகிறது. ஆனால் இதன் பின்னணி உண்மை வேறு தான் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

தலை ஈரத்தால் சளி பிடிக்குமா? உண்மையைப் பாருங்க!

“தலை ஈரத்திற்கும் சளிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் வைரஸ் தொற்றே சளிக்கு காரணம்” மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். நமக்கு சளி பிடிக்கக் காரணமாக இருப்பது ரைனோ வைரஸ் (Rhino Virus) ஆகும். இது காற்றின் மூலம் பரவும் ஒரு வைரஸாகும். தலை ஈரமாக இருந்தாலோ, உடல் குளிர்ந்திருந்தாலோ அந்த வைரஸ் எளிதில் உடலுக்குள் நுழைந்து பெருகும் வாய்ப்பு அதிகம். அதனால் தலை ஈரம் “காரணம்” அல்ல; ஆனால் “சூழல்” மட்டுமே.

இந்த பதிவும் உதவலாம்: முடியை ஸ்ட்ராங்காக்கும் மூங்கில் இலை.. இதை சரியாக எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ்

முடி ஈரம் & ரைனோ வைரஸ் தொடர்பு

தலை முடி நீண்டதாகவும் ஈரமாகவும் இருந்தால்:

* முடிக்குள் ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும்.

* அந்த ஈரப்பதம் ரைனோ வைரஸ் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் ஆகிறது.

* இதன் மூலம் வைரஸ் உடலுக்குள் நுழைந்து சளி, மூச்சுத்திணறல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

ஆனால், இதற்கான தீர்வு மிக எளிது – தலை ஈரமாக வைக்காதது மற்றும் தூய்மையாக வைத்திருப்பது.

முடியை வெட்டாமல் இருந்தால் சளி பிடிக்குமா?

பல பெரியவர்கள் கூறும் ஒரு நம்பிக்கை — “முடி நீளமாக இருந்தால் சளி பிடிக்கும்.” இது ஒரு பழமையான அறிவியல் காரணம் கொண்டது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். “முடி நீண்டால் வியர்வை அதிகமாக தங்கும். அந்த ஈரப்பதம் ரைனோ வைரஸுக்கு அனுகூலமான சூழல் தரும். இதனால் சளி எளிதில் ஏற்படும்,” என்கிறார் அவர். அதனால் ஆண்கள் முடியை அடிக்கடி வெட்டி, தலை ஈரமில்லாமல் வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும், சளி தடுப்புக்கும் உதவும்.

சளி தடுக்கும் எளிய வழிமுறைகள்

* குளித்த பிறகு தலை முழுவதும் துவைத்து உலர்த்திக் கொள்ளவும்.

* தலையில் வியர்வை இருந்தால் உடனே துடைத்துக் கொள்ளவும்.

* இரவு படுக்கச் செல்லும் முன் தலை முழுவதும் உலர்ந்திருக்க வேண்டும்.

* அடிக்கடி முடி வெட்டிக் கொள்ளவும்.

* சளி பாதிப்பு இருக்கும் இடங்களில் முகமூடி அணியவும்.

இறுதியாக..

தலை ஈரமா இருந்தாலே சளி பிடிக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை தான். ஆனால் உண்மையில் சளி என்பது ரைனோ வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்று. தலை ஈரமாவதால் அந்த வைரஸ் எளிதில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தலை ஈரம் இல்லாமல் வைத்துக் கொள்வதும், தூய்மையாக பராமரிப்பதும் சளியைத் தவிர்க்கும் சிறந்த வழி என மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் அல்லது பரிந்துரைகளை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து விளைவுகள் மாறுபடலாம்.

Read Next

டெங்கு காய்ச்சலால் உடல் வலி தாங்க முடியவில்லையா? நிபுணர் கூறும் வலி குறைக்கும் வழிகள் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 11, 2025 14:13 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content