Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

மஞ்சளை நீங்க சரியா தான் யூஸ் பண்றீங்களா? இப்படி எடுத்துக்கிட்டா என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? டாக்டர் விளக்கம்

மஞ்சள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், தவறான முறையிலோ அல்லது அதிகளவு எடுத்துக் கொண்டாலோ உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதில் மஞ்சளை அதிகளவு உட்கொள்வதால் என்னென்ன விளைவுகளைக் காணலாம்.

இன்றைய காலத்தில், நம் உடலுக்கு ஆரோக்கியமிக்க உணவுப்பொருள்களைச் சேர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறே, நம் அன்றாட சமையலில் சேர்க்கும் மஞ்சள் ஒரு வகையான சிறந்த மசாலா ஆகும். இது பல வகையான பண்புகளைக் கொண்டுள்ளது. நல்ல தேர்வாக இருந்தாலும், இதை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அவ்வாறு, நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய மஞ்சளை தவறான வழியிலோ அல்லது அதிகளவு எடுத்துக் கொள்வதோ நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் நாம் அதிகளவு மஞ்சள் எடுத்துக் கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் விவேக் ஜோஷி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

அவர் வீடியோவில் கூறியதாவது, “இப்போதெல்லாம் மஞ்சள் ஒரு வகையான சூப்பர்ஃபுட் ஆகும். இணையம் மூலமாக இது பிரபலமாகிவிட்டது. ஆனால் மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெற சில நுணுக்கங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மஞ்சளைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் மஞ்சளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம். இதில் அதைப் பற்றி பார்க்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் கலந்த நீரில் நீராவி எடுப்பதால் உங்க உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சமையலில் மஞ்சளை சேர்க்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

மக்கள் செய்யும் முதல் தவறு என்னவெனில், அவர்கள் மஞ்சள் உள்ள உணவை சாப்பிட பயப்படுகிறார்கள் அல்லது சமைக்கும்போது மஞ்சள் சேர்க்க பயப்படுகிறார்கள். உண்மையில், இது ஒரு பெரிய தவறு. உணவை சமைக்கும்போது மஞ்சளைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், மஞ்சளின் விளைவு மற்றும் உடலில் மஞ்சளை உறிஞ்சுதல், உடலில் மஞ்சளின் உயிர் கிடைக்கும் தன்மை நிறைய அதிகரிக்கிறது. எனவே சமைக்கும்போது மஞ்சளைச் சேர்க்கப் போகிறீர்கள் என்றால், அதை அலங்கரிக்காமல் சமைப்பதற்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறார். இது மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம், அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம்.

மஞ்சளின் உறிஞ்சுதல் வெறும் 1% மட்டுமே. மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் 1% பலன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் நீங்கள் 100% பலன்களை விரும்பினால், பின்வரும் பரிந்துரைகளைப் பின்பற்றலாம்.

மஞ்சள் சேர்த்துக் கொள்வதற்கான பரிந்துரைகள்

மஞ்சளை உணவில் சேர்ப்பது

மஞ்சளால் உணவை சமைப்பதில் பயப்பட வேண்டாம். இதனால், வேறு எதையும் இழக்கப் போவதில்லை. மஞ்சளை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம்.

குர்செட்டின் உணவுடன் சேர்ப்பது

இரண்டாவதாக, குறிப்பிட்ட உணவுப் பொருட்களுடன் மஞ்சளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ப்ரோக்கோலி அல்லது வெங்காயத்துடன் அல்லது நெளிகோதுமையுடன் சேர்க்கலாம். இவை குர்செட்டின் நிறைந்த உணவுப் பொருட்கள் ஆகும். ஏனெனில், குர்செட்டின் நிறைந்த உணவில் மஞ்சளைச் சேர்ப்பதன் மூலம், மஞ்சளின் விளைவு மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே வெங்காயம் அல்லது குர்செட்டின் நிறைந்த வேறு எந்தப் பொருளையும் பயன்படுத்தினால், அந்த உணவை மஞ்சளுடன் சமைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒன்றா.. இரண்டா? பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?

குறைந்தளவு மஞ்சள் பயன்படுத்துவது

மூன்றாவதாக, குறைந்தளவு மஞ்சளைச் சேர்ப்பது. ஆம். மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அற்புதமான அழற்சி எதிர்ப்பு, நிறைய ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இதனால், மக்கள் அன்றாட உணவில் நேரடியாக அரை டீஸ்பூன் அல்லது ஒரு டீஸ்பூன் மஞ்சளைச் சேர்க்கின்றனர். ஆனால், இது மிக அதிகமாகும். ஒருவருக்கு சமைக்கும்போது, இரண்டு மூன்று சிட்டிகை மஞ்சளுடன் தொடங்க வேண்டும். இரண்டு பேர் அல்லது மூன்று பேர் இருந்தால், 1/4 டீஸ்பூன் மஞ்சள் போதுமானதாக இருக்கும்.

அதிகளவு மஞ்சளைச் சேர்ப்பதால் வயிற்று வலி அல்லது அசௌகரியம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தளவு மஞ்சள் சேர்ப்பது போதுமானதாக இருக்கும். எனவே மஞ்சளைப் பயன்படுத்த பயப்பட வேண்டாம். ஆனால் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அனைத்து நன்மைகளையும் பெற முடியாது. மெதுவாக, சீராக பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம்.

கருப்பு மிளகுடன் மஞ்சள் சேர்ப்பது

நான்காவதாக கருப்பு மிளகுடன் மஞ்சள் சேர்ப்பது அடங்குகிறது. எனவே, உணவை சமைக்கும் போதெல்லாம் ரசனைக்கேற்ப சிறிது கருப்பு மிளகைச் சேர்க்கலாம். ஏனெனில், இது மஞ்சள் உறிஞ்சுதல் 2,000% அதிகரிக்கிறது.

சிறிது கொழுப்புடன் மஞ்சளைப் பயன்படுத்துவது

மஞ்சளைப் பயன்படுத்தும் போது சிறிது கொழுப்புடன் மஞ்சளைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார். ஏனெனில் மஞ்சள் கொழுப்பில் கரையக்கூடியது. எனவே கொழுப்பை அதிகரிப்பது உயிரியல் திறனை மேம்படுத்துகிறது. இது உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. எனவே, சமைக்கும் போதெல்லாம் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் அல்லது வேறு எந்த எண்ணெயையும் சேர்த்து உணவில் சமைக்கலாம். சீரகம் அல்லது வேறு ஏதேனும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தினால், அந்த மசாலாப் பொருட்களை எண்ணெயில் வறுக்கலாம். மற்ற பொருட்களைச் சேர்த்த பிறகு சிறிது மஞ்சள் சேர்ப்பதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம்.

உணவில் சேர்க்கப் போகும் மஞ்சளிலிருந்து முழு பலன்களையும் பெற, சிறிய தவறுகளைத் தவிர்த்து மருத்துவர் பரிந்துரைகளைக் கையாள வேண்டும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள்.. கல்லீரலுக்கு நல்லதா.? கெட்டதா.? ஹார்வர்டு டாக்டரின் பதில்..

Image Source: Freepik

Read Next

30 நாள்களில் நீரிழிவு நோயை கன்ட்ரோல் செய்ய இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்க.. மருத்துவரின் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 01, 2025 13:25 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content