Diabetes Diet: சர்க்கரை நோயாளிகளின் நலம் காக்கும் துவரம் பருப்பு, எப்படி சாப்பிடுவது?

  • SHARE
  • FOLLOW
Diabetes Diet: சர்க்கரை நோயாளிகளின் நலம் காக்கும் துவரம் பருப்பு, எப்படி சாப்பிடுவது?


Best Foods for Diabetes: துவரம் பருப்பின் நுகர்வு இந்தியாவில் அதிகம். இதில், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளது. சில வகை பருப்புக்களை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன், பருப்பு சாப்பிடுவதால் அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

நீரிழிவு நோயாளிகளுக்கும் துவரம் பருப்பு நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இது குறித்த மேலும் தகவலுக்கு டெல்லியின் ஹோலி குடும்ப மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சனா கில்லிடம் பேசினோம். அவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு துவரம் பருப்பு நல்லதா?

இது குறித்து உணவியல் நிபுணர் சனா கில் கூறுகையில், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிப்பதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், அந்த நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார். ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த உணவை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

study source: National center for biotechnology information

அந்தவகையில், துவரம் பருப்பில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இந்த பருப்பை சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். துவரம் பருப்பை சாப்பிடுவதால் ஹைப்பர் கிளைசீமியாவை (உயர் இரத்த சர்க்கரை) கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. இது ஒரு நல்ல அளவு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.

இந்த பதிவும் உதவலாம் : சில அறிகுறிகள் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என எச்சரிக்கிறது தெரியுமா?

துவரம் பருப்பு சர்க்கரை நோயிலிருந்து நம்மை பாதுகாக்குமா?

துவரம் பருப்பை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில், துவரம் பருப்பை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், அவர்களின் உடல் எடை கணிசமாக அதிகரிக்கிறது. இந்நிலையில், துவரம் பருப்பை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. துவரம் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயிற்றை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைக்கும். இதனால், உடல் எடையை எளிமையாக கட்டுப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

துவரம் பருப்பை எப்படி உட்கொள்ள வேண்டும்?

துவரம் பருப்பை மதிய உணவு அல்லது இரவு உணவில் உட்கொள்ளலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் சமைத்த துவரம் பருப்பை அரை கிண்ணம் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் தைராய்டு நோயாளியாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி பருப்பு வகைகளை தினமும் உட்கொள்ள வேண்டாம். துவரம் பருப்பை சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம். இந்த பருப்பை வைத்து கிச்சடி செய்து சாப்பிடலாம். மேலும், பருப்பு சாம்பார் சாப்பிடுவது நல்லது.

Pic Courtesy: Freepik

Read Next

Diabetes Prevention Tips: நீரிழிவு நோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியவை

Disclaimer