Fri Sep 11, 2026 | 09:50 PM IST

Doctor Verified

குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பாதுகாப்பானதா? குழந்தைக்கு எப்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது?

குழந்தையின் சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், எந்தவொரு பொருள்களையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். இதில் குழந்தை எந்த வயதில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

பொதுவாக, பெரியவர்களின் சருமத்துடன் ஒப்பிடுகையில் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதாகவும், உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். குறிப்பாக, சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் குழந்தைகளை வேகமாகக் பாதிக்கலாம். எனவே தான் பெற்றோர்கள் பலரும் குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பதற்கு, அவர்களுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை விரும்புகின்றனர். அதே சமயம், குழந்தைகளுக்கு எந்த வகையான தயாரிப்பு பாதுகாப்பானது, எப்போது பயன்படுத்த வேண்டும் இது போன்ற கேள்விகள் பெற்றோர்களுக்கு அடிக்கடி எழக்கூடும்.

குழந்தையின் சருமம் சருமம் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், லேசான சூரிய ஒளியில் கூட வெப்பம் அல்லது எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர, சூரிய ஒளியின் காரணமாக, புற ஊதா கதிர்கள் நீண்ட காலத்திற்கு தோல் புற்றுநோய் மற்றும் நிறமி போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே, சரியான வயதில், சரியான தயாரிப்புடன், சரியான முறையில் குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.

இதில், டெல்லியில் உள்ள சரின் ஸ்கின் கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவரான டாக்டர் அங்கூர் சரின் அவர்களிடமிருந்து எந்த வயது குழந்தைகள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Sunscreen: சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக இதை பயன்படுத்துங்க முகம் பளபளக்கும்!

குழந்தைக்கு எந்த வயதில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது?

சரின் ஸ்கின் கிளினிக்கின் தோல் மருத்துவரான டாக்டர் அங்கூர் சரின் அவர்களின் கூற்றுப்படி, "ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் பொதுவாக நேரடி சூரிய ஒளியில் படக்கூடாது. மறுபுறம், ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு, சன்ஸ்கிரீன் முக்கியம். அத்தகைய குழந்தைகளுக்கு பரந்த அளவிலான SPF 50 கொண்ட, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். மேலும் குழந்தை தொடர்ந்து வெயிலில் இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.

அதன் படி, 0–6 மாதங்கள்: நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டாம்.

6 மாதங்களுக்கு மேல்: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பரந்த-ஸ்பெக்ட்ரம் SPF 50 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

வெளியில் இருக்கும்போது: ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் தடவ வேண்டும். குறிப்பாக, குழந்தைக்கு அதிகமாக வியர்த்தால் அல்லது விளையாடும்போது தண்ணீரில் விழுந்தால் கூட சன்ஸ்கிரீன் தடவலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை

குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் அதே வேளையில், பின்வருவனவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • சன்ஸ்கிரீன் கடுமையான இரசாயனங்கள், பாரபென்கள் மற்றும் வாசனை இல்லாததாக இருக்க வேண்டும்.
  • சன்ஸ்கிரீன் UVA மற்றும் UVB இரண்டிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது.
  • இது நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், இதனால் குழந்தை விளையாடும்போது வியர்த்தால் அல்லது தண்ணீரில் விழுந்தால், விளைவு அப்படியே இருக்கும்.
  • தோல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்

இந்த பதிவும் உதவலாம்: Newborn summer Tips: பெற்றோருக்கு எச்சரிக்கை.. கோடையில் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்..!

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி

சிறு குழந்தைகளுக்கு, இது சுமார் 15-20 நிமிடங்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட வேண்டும்.

முகம், காதுகள், கழுத்து, கைகள் மற்றும் கால்கள் போன்ற வெளிப்படும் பகுதிகளில் தாராளமாகப் பூசலாம்.

அதே சமயம், கண்கள் மற்றும் உதடுகளுக்கு அருகில் இதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும், உதடுகளுக்கு குழந்தை பாதுகாப்பான லிப் பாம் பயன்படுத்தலாம்.

மருத்துவரின் கருத்து

டாக்டர் அங்கூர் சரின் அவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கான சன்ஸ்கிரீன்சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியமாகும். ஆனால் சரியான வயதில், சரியான SPF இல் அதைப் பயன்படுத்துவதும், இரண்டு மணி நேர இடைவெளியில் மீண்டும் பயன்படுத்துவதும் பயனுள்ள பாதுகாப்பை உறுதி செய்கிறது. குழந்தைகள் நேரடி சூரிய ஒளியில் வெளிப்படுவதைத் தவிர்ப்பதும், பொருத்தமான ஆடைகளை அணியச் செய்வதும் குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முடிவுரை

குழந்தையின் சருமம் மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டதாகும். ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை. ஆனால் நேரடி சூரிய ஒளியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதும், லேசான ஆடைகளை அணிவதும் போதுமானதாகும். ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைக்கு பாதுகாப்பான சன்ஸ்கிரீன் அவசியம்.

மேலும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் பயன்படுத்துவதும், சூரிய ஒளியைத் தவிர்க்க பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த வழியில் குழந்தையின் சருமம் பாதுகாப்பாக இருக்கும். மேலும் இது வெயில் மற்றும் எதிர்கால சரும பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: சுட்டெரிக்கும் வெப்பத்தில் சன்ஸ்கிரீன் ரொம்ப அவசியம் மக்களே.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Image Source: Freepik

Read Next

குழந்தைகளுக்கு ஏற்படும் மார்பு நெரிசலை இயற்கையாகவே போக்குவது எப்படி? மருத்துவரின் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 02, 2025 20:30 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content