Expert

Weight Loss Diet: மோமோஸை இப்படி சாப்பிட்டால் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Diet: மோமோஸை இப்படி சாப்பிட்டால் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!!


How To Make Healthy Momos For Weight Loss: வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக காணப்படும் சாலையோர உணவுகளில் ஒன்று மோமோஸ். இது தற்போது, தென் இந்தியாவிலும் பிரபலமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மோமோஸ் பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மோமோஸ் சாப்பிடுவதால், உடல் எடையை குறைக்கலாம் என்று கூறினால் நீங்கள் தன்னை மறந்து சிரிப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

ஏனென்றால், உடல் எடையை குறைக்க காலம் காலமாக கூறப்படும் ஒரே வாக்கியம் “பிடித்த விஷயங்களை விட்டுவிட வேண்டும்” என்பது தான். உடல் எடையை குறைக்க நம்மில் பெரும்பாலானோர் மோமோஸ் சாப்பிடுவதை நிறுத்தியிருப்போம். ஏனென்றால், மோமோஸ்-யில் அதிக கலோரிகள் உள்ளதால் உடல் எடையை இது அதிகரிக்கும். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இனி கவலை வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…

மோமோஸ் சாப்பிடுவதன் மூலம் எளிமையாக உடல் எடையை குறைக்கலாம். ஆனால், அவற்றை நிபுணரின் அறிவுறுத்தல்களின்படி சாப்பிட்டால் மட்டுமே அது சாத்தியம். உடல் எடையை எளிமையாக குறைக்க மோமோஸை எப்படி சாப்பிட வேண்டும் என, டயட்டீஷியன் ராதிகா கோயல் கூறும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க மோமோஸ் சாப்பிடுவது எப்படி?

  • நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் எப்போதும் வேகவைத்த மோமோஸ்களை சாப்பிடலாம். ஆனால் மைதாவுக்கு பதிலாக கோதுமை அல்லது அரிசி மாவால் செய்யப்பட்டதை தேர்வு செய்யவும்.
  • நீங்கள் அரிசி மாவால் செய்யப்பட்ட வேகவைத்த மோமோஸ் சாப்பிட்டால், அவை ஜீரணிக்க எளிதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

  • நீங்கள் உடல் எடையை குறைக்க மோமோஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதன் ஸ்டஃப்பிங்கையும் மனதில் கொள்ளுங்கள்.
  • வெஜ் மோமோஸில் தோராயமாக 280 கலோரிகள் உள்ளன. எனவே உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க விரும்பினால், இது சரியான தேர்வாகும்.
  • வறுத்த மோமோஸில் இந்த கலோரிகள் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க விரும்பினால் வறுத்த மோமோஸை சாப்பிடவே கூடாது.
  • மோமோஸை உணவாக உண்ணுங்கள். சாப்பிட்ட பிறகு தீணியாக உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

  • இதனுடன் சீஸ், சிக்கன், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை ஸ்டஃபிங்கில் சேர்க்கவும். சீஸ் மற்றும் சிக்கன் உடலுக்கு முழுமையான புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில், காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.
  • மோமோஸுடன் பரிமாறப்படும் சட்னியில் அதிக சோடியம் மற்றும் எண்ணெய் உள்ளது. எனவே, அதற்கு பதிலாக புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சாப்பிடுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Guava For Weight Loss: சட்டுனு உடல் எடையை குறைக்கனுமா? அப்போ கொய்யாவை இப்படி சாப்பிடுங்கள்!

Disclaimer