$
Best Time To Eat Guava For Weight Loss: ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யா மிகவும் ஆரோக்கியமான பழம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது அனைத்து சீசன்களிலும் எளிமையாக கிடைக்கும் பழம். இதை, சட்னி, ஸ்மூத்தி மற்றும் சாலட் என பல வகைகளில் உட்கொள்கிறோம். கொய்யா குமட்டல் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
கொய்யா உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கொய்யாவில் காணப்படும் அத்தியாவசிய பண்புகள் எடையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இதற்கு கொய்யாவை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க கொய்யாவை எப்படி உட்கொள்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம் : முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்
உடல் எடையை குறைக்க கொய்யா பயனுள்ளதா?

கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெற முடியாது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யா சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி ஏற்படாது, இது வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனால், உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.
கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக முழுமையாக ஜீரணிக்க நேரம் எடுக்கும் மற்றும் உங்களுக்கு சீக்கிரம் பசி ஏற்படாது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு கொய்யாவை எப்படி சாப்பிடுவது?

கொய்யாவை அதன் தோலுடன் உண்டால் மட்டுமே சிறப்பான பலன்களை பெற முடியும். ஏனெனில், செரிமானத்திற்கு தேவையான அத்தியாவசிய பண்புகள் அதன் தோல்களில் தான் காணப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
கொய்யா ஸ்மூத்தி
கொய்யா ஸ்மூத்தி குடிப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதற்கு 2 கொய்யாப்பழம் மற்றும் 4 ஸ்ட்ராபெர்ரிகளை மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடன், 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 கப் பால் சேர்க்கவும். இவற்றை ஒன்றாக அரைத்தால், ஸ்மூத்தி தயார்.
கொய்யா/புதினா ஜூஸ்

கொய்யா மற்றும் புதினா ஜூஸ் தயார் செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் 2 கொய்யா, அரை வெள்ளரி, சில புதினா இலைகள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக அரைத்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்தால் ஜூஸ் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
கொய்யா சட்னி
கொய்யா சட்னி தயார் செய்ய, 250 கிராம் கொய்யாவை பொடியாக நறுக்கவும். இப்போது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கொத்தமல்லி இலைகள், 2 பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால், கொய்யா சட்னி தயார்.
Pic Courtesy: Freepik