Sat Sep 12, 2026 | 12:21 AM IST

Doctor Verified

சளி, இருமல் இருக்கும்போது ஹாட் சாக்லேட் குடிக்கலாமா? ஊட்டச்சத்து நிபுணர் கூறும் உண்மை

சளி, இருமல், தொண்டை வலி நேரத்தில் ஹாட் சாக்லேட் குடிப்பது நல்லதா? பாலின் விளைவு, சர்க்கரை பாதிப்பு மற்றும் பாதுகாப்பான மாற்றுகள் குறித்து நிபுணர் விளக்கம்.

குளிர்காலம் தொடங்கியதும் சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் பலரையும் வாட்டத் தொடங்கும். இப்படிப்பட்ட நேரங்களில், பலர் தானாகவே ஒரு சூடான ஹாட் சாக்லேட் கப்-ஐ தேடுவார்கள். அது மனதுக்கு ஆறுதலாக இருக்கும், தொண்டையை சற்று நிம்மதிப்படுத்தும். ஆனால், இது உண்மையில் உடல்நலத்திற்கு நல்லதா? அல்லது பிரச்சினையை மேலும் மோசமாக்குமா? இதுகுறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் & டயட்டிஷியன் திவ்யா காந்தி.

நோய்ப் போது ஏன் ஹாட் சாக்லேட் மீது ஆசை வரும்?

சூடான பானங்கள் தொண்டை வலியை தற்காலிகமாக குறைக்கும், உடலை சற்று தளர்வாக்கும், மனநலத்திற்கு ஆறுதல் தரும். இதனால், “சூடானது என்பதால் உடலுக்கும் நன்மை” என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால், நிபுணர் கூறுவது என்னவென்றால், “ஆறுதலாக இருக்கிறது என்பதற்காக எல்லா பானங்களும் நோயிலிருந்து மீள உதவும் என்று அர்த்தமில்லை.”

சளி – இருமல் நேரத்தில் ஹாட் சாக்லேட் குடித்தால் என்ன நடக்கும்?

பால் – முக்கிய பிரச்சினை

ஹாட் சாக்லேட்டின் முக்கிய கூறு பால். பால் பலருக்கு சளி (mucus) உற்பத்தியை அதிகரிக்கக் கூடியது. குறிப்பாக சளி, மூக்கடைப்பு, மார்பு நெரிசல் இருக்கும் போது. நிபுணர் தெளிவாக கூறுகிறார், “சாக்லேட் மற்றும் பால் சேர்ந்து சளியை அதிகரிக்கும். நோயின் போது இது நல்லதல்ல.” பால் தொண்டையில் தடிப்பு உணர்வை ஏற்படுத்தும். இருமலை அதிகமாக உணரச் செய்யும். மார்பு நெரிசலை மோசமாக்கும்.

சர்க்கரை – நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரி

ஹாட் சாக்லேட்டில் உள்ள மற்றொரு முக்கிய கூறு சர்க்கரை. நோயின் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். அதிக சர்க்கரை White Blood Cells (WBCs) செயல்பாட்டை பாதிக்கும். இதனால் கிருமிகளை எதிர்க்கும் திறன் குறையும். கஃபே-ஸ்டைல் ஹாட் சாக்லேட், ரெடி-மிக்ஸ் பவுடர்கள் - அதிக அளவு refined sugar கொண்டவை. உடனடி எரிசக்தி தரும், ஆனால் மீட்பு செயல்முறைக்கு உதவாது.

ஹாட் சாக்லேட்டில் ஏதேனும் நன்மை இருக்கிறதா?

ஆராய்ச்சிகள் கூறுவதாவது, கோகோ (Cocoa)-வில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மனநிலையை உயர்த்தும் (Serotonin boost), இதய ஆரோக்கியத்திற்கு சிறு நன்மை. ஆனால் பெரும்பாலான ஹாட் சாக்லேட்டில் கோகோவைக் காட்டிலும் பால், சர்க்கரை, அடிட்டிவ்கள் அதிகம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் தினமும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா.? முழு விவரம் இங்கே..

சளி – இருமலுக்கு என்ன குடிப்பது சிறந்தது?

ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைப்பவை:

  • தேன் + இஞ்சி சேர்த்த வெந்நீர்
  • மூலிகை டீ (Herbal tea)
  • மஞ்சள் பால் (அளவோடு)

காய்கறி சூப்

ஏன் இவை நல்லது?

  • தேன் – தொண்டையை மூடி இருமலை குறைக்கும்
  • இஞ்சி – அழற்சி குறைக்கும், சளி தளர்க்கும்
  • மஞ்சள் – இயற்கை கிருமிநாசினி
  • சூப் – உடலுக்கு நீர்ச்சத்து + ஊட்டச்சத்து

இறுதியாக..

சளி, இருமல் இருக்கும் போது ஹாட் சாக்லேட் மனதுக்கு ஆறுதலாக இருந்தாலும், அதில் உள்ள பால் சளியை அதிகரிக்கலாம், சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கலாம். எனவே, இது நோயிலிருந்து மீள உதவும் பானம் அல்ல, தற்காலிக ஆறுதலுக்காக மட்டுமே. அதற்குப் பதிலாக நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் பானங்களைத் தேர்வு செய்வதே சிறந்தது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நலத் தகவல்களுக்காக மட்டுமே. சளி, இருமல், மூச்சுத் திணறல் அல்லது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், உணவுமுறை மாற்றங்களுக்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.

Read Next

கல்லீரல் வீக்கம் இருந்தால் பப்பாளி சாப்பிடலாமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 14, 2025 18:56 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content