
குளிர்காலம் தொடங்கியதும் உடலை சூடாக வைத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தவும் மக்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை நாடுகின்றனர். அந்த வரிசையில், இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon Water) தற்போது சமூக ஊடகங்களில் “குளிர்கால ஆரோக்கிய பானம்” எனப் பரவலாக பேசப்படுகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து அதிகாலையில் குடிப்பதால், செரிமானம் மேம்படும், இரத்த சர்க்கரை கட்டுப்படும், உடல் எடை குறைய உதவும் என்ற பல்வேறு கூற்றுகள் வைரலாகி வருகின்றன. ஆனால், தினமும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது உண்மையில் பாதுகாப்பானதா? இதற்கு தெளிவான விளக்கத்தை ஹைதராபாத் யசோதா மருத்துவமனை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் & ஹெபடாலஜிஸ்ட், டாக்டர் சாரதா பசங்குளபதி அளிக்கிறார்.
குளிர்காலத்தில் தினமும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா?
டாக்டர் சாரதா பசங்குளபதியின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டை இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் லேசான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவும்.
ஆனால், அதிக அளவு அல்லது தவறான வகை இலவங்கப்பட்டை பயன்படுத்தினால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இலவங்கப்பட்டை தண்ணீர் ஒரு துணை ஆரோக்கிய பானம் மட்டுமே. இது சமநிலை உணவுமுறை அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகக் கருதக்கூடாது.
எந்த இலவங்கப்பட்டை சிறந்தது?
இலவங்கப்பட்டையில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன:
1. காசியா இலவங்கப்பட்டை (Cassia Cinnamon)
- அதிக அளவு Coumarin கொண்டது
- அதிகமாக உட்கொண்டால்
- கல்லீரல் பாதிப்பு
- மருந்துகளுடன் எதிர்வினை ஏற்படலாம்
2. சிலோன் இலவங்கப்பட்டை (Ceylon Cinnamon)
- “True Cinnamon” என அழைக்கப்படுகிறது
- Coumarin அளவு மிகவும் குறைவு
- தினசரி பயன்பாட்டிற்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது
தினமும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க விரும்புவோர் சிலோன் இலவங்கப்பட்டையைத் தேர்வு செய்வது சிறந்தது.
ஒரு நாளைக்கு எவ்வளவு இலவங்கப்பட்டை போதுமானது?
- ஒரு சிறிய கப் இலவங்கப்பட்டை தண்ணீர்
- ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை அல்லது ஒரு சிட்டிகை பொடி
அதிகமாக எடுத்துக் கொள்வது:
- வாயில் எரியும் உணர்வு
- வயிற்று வலி
- இரத்த சர்க்கரை திடீர் வீழ்ச்சி
போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
யார் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
பின்வரும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி இதை உட்கொள்ளக் கூடாது:
- கல்லீரல் நோய் உள்ளவர்கள்
- கர்ப்பிணி பெண்கள்
- இரத்த மெலிவு, நீரிழிவு, இதய மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்
- நீண்டகால மருந்து சிகிச்சையில் இருப்பவர்கள்
இலவங்கப்பட்டை சில மருந்துகளின் செயல்திறனை மாற்றக்கூடும்.
இறுதியாக..
இலவங்கப்பட்டை தண்ணீர் குளிர்காலத்தில் உடலை சூடேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் உதவலாம். ஆனால் - சரியான வகை (சிலோன்), சரியான அளவு, உடல் நிலைக்கு ஏற்ற பயன்பாடு - இவையே அதன் பாதுகாப்பை தீர்மானிக்கின்றன. அதிகம் என்றால் அமுதமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கிய தகவல்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நல நிலை, கர்ப்பம் அல்லது மருந்து சிகிச்சையில் இருப்பவர்கள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
Read Next
குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா.? ஆயுர்வேத நிபுணர் விளக்கும் உண்மை..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 13, 2025 22:34 IST
Published By : Ishvarya Gurumurthy