அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

  • SHARE
  • FOLLOW
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?


நகர்ப்புற வாழ்க்கைமுறையில் பலர் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இல்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கின்றனர். எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இங்கே காண்போம்.

இதய நோய் அபாயம் அதிகரிக்கும்

அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இதய பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகம். முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே முடிந்தவரை கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உயரலாம்

நீங்கள் ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், முட்டைகளை தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், முட்டையில் குறிப்பாக மஞ்சள் கருவில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் இவற்றை சாப்பிட்டால் எல்டிஎல் அளவு அதிகரித்து இதயப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: Egg Side Effects: அளவுக்கு அதிகமா முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்

முட்டை கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், முட்டையில் சோடியம் உள்ளது. எனவே இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால், அதிக கொலஸ்ட்ரால், அதிக பிபி போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எடை கூடும்

அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடுவது அவர்களின் எடையை பாதிக்கும். கலோரிகள் நிறைந்த முட்டைகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையை உணவில் சேர்க்கும் முன் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படி முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

Image Source: Freepik

Read Next

Green Grapes Benefits: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? பச்சை திராட்சை ஒன்னு போதும்.

Disclaimer

குறிச்சொற்கள்