Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சலா.? கவலைப்பட வேண்டாம்.. மருத்துவர் விளக்கம்..

குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு வரும் காய்ச்சல் இயல்பானது என்று டாக்டர் ஹரிணி ஸ்ரீ கூறுகிறார். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வந்தால் பெற்றோர் அச்சப்பட வேண்டியதில்லை என்று குழந்தை மருத்துவர் ஹரிணி ஸ்ரீ கூறுகிறார். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகச் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி என அவர் கூறினார்.

குழந்தை மருத்துவர் ஹரிணி ஸ்ரீ கூறுகையில், “பொதுவாக தடுப்பூசி போட்ட 12 மணி நேரத்துக்குள் சிறிய அளவிலான காய்ச்சல் ஏற்படும். இது உடல் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இயல்பான செயல்முறையாகும். அதனால் பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை” என்றார்.

artical  - 2025-09-04T111322.280

குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்?

* ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பு – சளி, போலியோ, காச நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை தடுக்கும்.

* சிறு வயதில் நோய் எதிர்ப்பு சக்தி – நோய் வராமல், உடல் எதிர்ப்பு சக்தியை சிறுவயதிலேயே வளர்க்கிறது.

* பெரிய பின்விளைவுகளைத் தடுக்கும் – மூளை சேதம், கேட்க்கும் திறன் இழப்பு போன்ற ஆபத்துகளிலிருந்து காக்கிறது.

* சமூக பாதுகாப்பு – தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்து, சமூகத்தையும் பாதுகாக்கிறது.

* பாதுகாப்பான வழி – குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க தடுப்பூசி மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: HPV தடுப்பூசி கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்குமா? இதன் உண்மையை மருத்துவரிடம் இருந்து தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்..

பெற்றோருக்கான அறிவுரை

குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு அழுகை, சோர்வு, அல்லது சிறிய காய்ச்சல் வருவது முற்றிலும் இயல்பானது. அதனால் தடுப்பூசியை தவிர்க்காமல், பிறப்பு முதல் 5 வயது வரை உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் பெற்றோர் கட்டாயம் போட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

View this post on Instagram

A post shared by Dr C M Harini Sree(MD Paed.,FNNF(Neo)) (@dr_harini_sree_paediatrician)

இறுதியாக..

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு காய்ச்சல் வருவது ஆரோக்கியமான அறிகுறியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தி சரியாகச் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி. பெற்றோர் அச்சப்படாமல் குழந்தைக்கு அனைத்து தடுப்பூசிகளையும் தவறாமல் போடுவது மிக அவசியம் என்று மருத்துவர் கூறினார்.

{Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல் பகிர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனை அல்ல. குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு அதிக காய்ச்சல், உடல் வீக்கம், அல்லது வேறு கடுமையான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக தகுதியான சிறுவர் மருத்துவரை அணுகவும்.}

Read Next

மழைக்காலத்தில் குழந்தைகளை பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க நீங்க பின்பற்ற வேண்டிய குறிப்புகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content