ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடலாமா? எப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லது

Health benefits of eating flax seeds: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு வகையான விதைகள் உதவுகிறது. அவ்வாறு உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் ஆளி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆளி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றையும், அதை எவ்வாறு சாப்பிடலாம் என்பது குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடலாமா? எப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லது


Health benefits of consuming flax seeds ways to eat flax seeds: நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள், பானங்கள், மூலிகைகள் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருள்கள் உதவுகின்றன. இந்த வரிசையில் விதைகள் நம் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய பிரபலமான விதைகளில், ஆளி விதைகள் அதன் வளமான ஊட்டச்சத்து தன்மை காரணமாக நன்கு அறியப்படுகிறது. இந்த சிறிய விதைகள் நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும்.

ஆளி விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானம், எடை மேலாண்மை மற்றும் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. ஆளி விதைகள் இது போன்ற ஏராளமான நன்மைகளைக் கொண்டிருப்பினும், இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை பெரும்பாலும் குழப்பமானதாக இருக்கலாம். இதை வறுத்தெடுத்தோ, மாவில் சேர்க்கவோ, பேக்கிங்கில் பயன்படுத்தவோ அல்லது ஆளி விதை எண்ணெயாகவோ கூட பயன்படுத்தலாம். ஆனால், இதை அப்படியே சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Weight Loss: என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? ஃபிட் ஆக இந்த 10 விதைகளை சாப்பிடுங்க!

ஆளி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை ஆதரிப்பதுடன், குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக அமைகிறது. இது தவிர, இந்த விதைகளில் லிக்னான்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விதைகளில் உள்ள புரத உள்ளடக்கம் தசை பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஆய்வு ஒன்றில், ஆளி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது கொழுப்பின் அளவைக் குறைப்பதில் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும், புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது.

ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

அன்றாட உணவில் ஆளி விதைகளைப் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். எனினும், இதை பச்சையாக உட்கொள்ளலாமா என்று யோசித்தால், அதற்கு பதில் ஆம். பச்சையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும் என்று அமையும். பச்சையான ஆளி விதைகள் நச்சுத்தன்மையற்றதாக இருப்பினும், அதில் உள்ள பைடிக் அமிலம் மற்றும் சயனோஜெனிக் கிளைகோசைடுகள் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்கள் உள்ளது.

மேலும், ஆய்வு ஒன்றில், ஆளி விதைகளை நேரடியாக உணவுப் பயன்பாடுகளில் பயன்படுத்துவதால், அதில் உள்ள சயனோஜெனிக் கிளைகோசைடுகள் ஒரு சாத்தியமான சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சேர்மங்களை அதிக அளவில் உட்கொள்வதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் அபாயம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடுதலாக, முழு ஆளி விதைகளை உட்கொள்வது பெரும்பாலும் செரிமான அமைப்பு வழியாக செரிக்கப்படாமல் செல்கிறது. இதனால் உடல் இதன் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சாமல் போகலாம். பச்சையான ஆளி விதைகளுக்குப் பதிலாக, அதை அரைத்து அல்லது ஊறவைத்து சாப்பிடுவது மிகச்சிறந்த நன்மைகளைத் தரும்.

பச்சையாக ஆளி விதைகளை சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

பச்சையாக ஆளி விதைகளை சாப்பிட விரும்புபவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

சிறியதாகத் தொடங்குவது

ஆளி விதைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான அசௌகரியத்தைத் தவிர்க்க, அதை படிப்படியாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சருமம் ஜொலிக்க.. கூந்தல் வலுவாக.. இந்த விதைகளை முயற்சிக்கவும்..

நிறைய தண்ணீர் குடிப்பது

ஆளி விதைகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. போதுமான நீரேற்றம் இல்லாமல் இருப்பது வீக்கம் அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, உடலுக்குத் தேவையான நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அரைத்து சாப்பிடுவதை தேர்ந்தெடுப்பது

ஆளி விதைகளை முழுவதையும் சாப்பிடுவதை அதை அரைத்து சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

இது போன்ற ஆரோக்கியமான வழிகளில் ஆளி விதைகளைச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  • ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வீக்கம் மற்றும் வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
  • குறிப்பாக, போதுமான தண்ணீர் இல்லாமல், இதை உலர்வாக சாப்பிடுவது வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
  • இதில் உள்ள சயனைடு நச்சுத்தன்மை அரிதானதாகும். பச்சையான ஆளி விதைகளை மிக அதிகமாக உட்கொள்வது லேசான சயனைடு வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கலாம்.
  • இவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இது ஹார்மோன் உணர்திறன் நிலைமைகள் உள்ளவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.

ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தந்திருப்பினும், இதை சாப்பிடும் முன்னதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு ஆளி விதை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா.?

Image Source: Freepik

Read Next

நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? இந்த நியூட்ரியண்ட்ஸை கட்டாயம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Disclaimer