Can you survive on just fruits for a week: பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஏனெனில் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. தேசிய மருத்துவ நூலகத்தின்படி, "பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். மேலும், இது எடையை சமநிலைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.” அதாவது ஒவ்வொரு நபரும் தங்கள் உணவில் பழங்களைச் சேர்க்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், சிலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற பெயரில் உணவுகளைத் தவிர்ப்பதுடன், அன்றாட உணவில் பழங்களை மட்டுமே சேர்ப்பதை பார்க்க முடிகிறது. அதாவது, பழங்களைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இதில் கேள்வி என்னவெனில், தொடர்ந்து ஏழு நாட்கள் பழங்களை மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது அனைவருக்கும் எழும். இது குறித்து யாதர்த் மருத்துவமனைகளில் உள்ள ஆலோசகர் மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர். அஸ்வனி கன்சால் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: பழங்களை சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து டீ குடிக்கணும் தெரியுமா? இதோ நிபுணர்கள் பதில்!
தொடர்ந்து ஒரு வாரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் என்னாகும் தெரியுமா?
ஊட்டச்சத்து குறைபாடுகள்
டாக்டர் அஷ்வனி கன்சால் அவர்களின் கூற்றுப்படி, “நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். உண்மையில், பழங்களை மட்டுமே சாப்பிடும்போது, அது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பழங்களில் புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கொழுப்புகள், புரதம் இல்லாமையால் தசை பலவீனத்திற்கு வழிவகுக்கலாம். அதேசமயம், கொழுப்பு இல்லாதது ஒருவரின் மூளை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்த இரத்த சர்க்கரை
"பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது. எனினும், அதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. எனினும், இதை உட்கொள்ளும்போது, அது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகவும் ஆபத்தானதாக அமையும். ஏனெனில், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பழங்களை மட்டுமே சாப்பிட்டால், அது சர்க்கரைக்கான பசியை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
பல் சிதைவு
தொடர்ந்து ஒரு வாரம் பழங்களை மட்டும் சாப்பிடும் போது, பற்சொத்தை பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பற்களை சரியாக சுத்தம் செய்யாதபோது அதன் ஆபத்து அதிகரிக்கிறது. பழங்களில் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருந்தாலும், அவற்றை மட்டும் சாப்பிடுவது பற்களின் எனாமலை சேதப்படுத்தலாம். ஏனெனில், இதில் அமிலத்தன்மை உள்ளது. இது இது வாயில் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? நிபுணர்களின் பதில் இங்கே!
செரிமான பிரச்சனைகள்
ஒரு வாரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மருத்துவரின் கூற்றுப்படி, "பழங்களில் நிறைய நார்ச்சத்து உள்ளது என்பதை அறிந்து எல்லோரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், அதிகளவு நார்ச்சத்து உட்கொள்ளலின் காரணமாக, வீக்கம், வாயு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், பழங்களை மட்டும் சாப்பிடுவது கூட வயிற்று அசௌகரியத்தை அதிகரிக்கலாம். மேலும், மற்றும்ஒழுங்கற்ற குடல் அசைவுகள் பிரச்சனையையும் அதிகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரின் கூற்றுப்படி, தொடர்ந்து ஒரு வாரம் பழங்களைச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே அன்றாட உணவில் ஆரோக்கியமிக்க பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலவையை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: டயட்டுக்காக பழங்களை மட்டுமே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளைச் சந்திக்க தயாராகிக்கோங்க
Image Source: Freepik