Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Expert

PCOS பிரச்சினை உள்ளவர்கள் இந்த கசாயத்தை குடியுங்க; வெறும் 30 நாளில் நல்ல மாற்றம் தெரியும்!

How to Make Drumstick Soup For PCOS patients: முருங்கை இலைகள் முதல் முருங்கை குச்சி வரை அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்தது என நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக முருங்கை காய் மற்றும் கீரை நாம் அடிக்கடி உணவு வழக்கத்தில் சேர்க்கப்படும் ஒன்று. தார் போது சந்தைகளில் உடல் எடையை குறைக்க உதவும் முருங்கைப் பொடி கூட விற்பனை செய்யப்படுகிறது. எந்த வடிவில் அவற்றை உட்கொண்டாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆனால், முருங்கைக்காயில் கஷாயம் செய்து எப்போதாவது குடித்திருக்கிறீர்களா? முருங்கைக்காயை கஷாயம் செய்து குடித்தால் பல பிரச்சனைகள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி உள்ள பெண்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கவும் இது உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்

முருங்கைக்காயில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. இதில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி, சி, கே, ஃபோலேட், பீட்டா கரோட்டின் மற்றும் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் முருங்கைக்காய் கஷாயத்தை குடித்து வந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவியல் நிபுணர் ஷிகா குமாரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் முருங்கைக்காய் கஷாயத்தைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், அதன் செய்முறை மற்றும் உட்கொள்ளும் முறை குறித்து விளக்கியுள்ளார். அவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

முருங்கை கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கைக்காயை கஷாயமாக்கி குடிப்பதால் உடலுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதில், கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

மேலும், நமது செரிமானமும் மேம்படும். இதனால் உங்கள் கலோரிகளை விரைவாக எரிப்பதுடன் உடல் எடையையும் குறைக்கலாம். அதுமட்டுமல்ல, பிசிஓடி, பிசிஓஎஸ், மாதவிடாய் கோளாறு போன்ற பல பிரச்சினைகளை குணப்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

இயற்கையான அழற்சி எதிர்ப்பு: முருங்கை காய்களில் வீக்கத்தைக் குறைக்க உதவும் சில பண்புகள் உள்ளன, இது PCOS உள்ள பெண்களுக்கும் மிகவும் பொதுவானது".

இந்த பதிவும் உதவலாம் : PCOS Treatment: PCOS பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை: முருங்கை காய்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

ஹார்மோன் சமநிலை: முருங்கை காய்களை சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, இது PCOS உள்ள பெண்களின் பொதுவான கவலையாகும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: பிசிஎஸ் உள்ள பெண்களுக்கு செரிமான பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இதில் உள்ள மருத்துவ குணங்கள் PCOS ஐ மேம்படுத்துவதோடு, அடிக்கடி நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்: இன்சுலின் எதிர்ப்பு PCOS உள்ள பெண்களிலும் காணப்படுகிறது, இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முருங்கைக்காய் கஷாயம் செய்வது எப்படி?

ஒரு பிரஷர் குக்கரில் ஒரு கப் முருங்கைக்காய் சேர்க்கவும். 2-3 கருப்பு மிளகுத்தூள் மற்றும் 1 பிரிஞ்சி இலை சேர்க்கவும். மேலே, சிறிது உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். இப்போது, அதில் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து 1-2 விசில் வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Signs Of PCOS: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்! இது pcos-ன் அறிகுறிகள்

பின்னர் அது ஆறியதும், வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தினமும் ஒரு கப் மட்டும் சாப்பிட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு நிகழும் அதிசயத்தைப் பாருங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Yeast Infection: இந்த வீட்டு வைத்தியம் மூலம் ஈஸ்ட் தொற்றை சரி செய்யலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content