$
Black Alkaline Water Benefits: கருப்பு கார நீர் என்ற கருப்பு ஆல்கலைன் தண்ணீர் ஒரு பிரபலமான பானமாகும். அதாவது இதில் வழக்கமான நீரை விட அதிக pH மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும். பொதுவாக உடலில் செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் தாது இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு நீர் அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனவே தான் உடல் போதுமான நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், நீரிழப்பு ஏற்படுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கருப்பு கார நீர் (Black Alkaline Water) உட்கொள்வது மேம்படுத்தப்பட்ட நீரேற்றத்தை அளிக்கிறது. இது செரிமானம் முதல் மேம்படுத்தப்பட்ட நச்சு நீக்கம் வரையிலான பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதன் தினசரி உட்கொள்ளல் கூடுதல் பயன்களைத் தருகிறது. குறிப்பாக, வெற்று தண்ணீருக்குப் பதிலாக புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாற்றைத் தேடுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு - இது ஏன் சொல்றாங்க தெரியுமா?
கருப்பு ஆல்கலைன் தண்ணீர்
கருப்பு நீர் என்பது அசுத்தமான தண்ணீரைக் குறிப்பதில்லை. உண்மையில் கருப்பு நீர் என்பது கார நீரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதாவது சாதாரண நீர் pH அளவு 7-ஐக் கொண்டிருக்கிறது எனில், இது நடுநிலையானது என்பதைக் குறிக்கிறது. இதுவே கருப்பு கார நீர் என்பது அதிக pH மதிப்பைக் கொண்டுள்ளதைக் குறிக்கிறது. இதில் பொட்டாசியம், உப்பு, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு கனிமங்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபுல்விக் அமிலம் மற்றும் ஹ்யூமிக் தாதுக்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் தண்ணீருக்குக் கருப்பு நிறத்தை வழங்குகிறது. இதுவே கருப்பு ஆல்கலைன் தண்ணீர் என அழைக்கப்படுகிறது.

கருப்பு கார நீர் குடிப்பதன் நன்மைகள்
ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த
கருப்பு ஆல்கலைன் நீரில் ஃபுல்விக் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஃபுல்விக் அமிலம் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உடலில் உள்ள உயிரணுக்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
நீரேற்றத்தை மேம்படுத்த
இந்த கருப்பு கார நீரில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது. இது வழக்கமான தண்ணீருடன் ஒப்பிடுகையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த எலக்ட்ரோலைட்டுகள் திரவ சமநிலையைப் பராமரிக்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் செயல்திறனுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Papaya Seeds Benefits: இனி பப்பாளி விதையை தூக்கி எரியாதீங்கா! இதுல அவ்ளோ நன்மைகள் இருக்கு
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த
கருப்பு கார நீரில் உள்ள ஒரு முக்கிய அங்கமான ஃபுல்விக் அமிலம் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக அறியப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்தப் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
செரிமானத்தை மேம்படுத்த
கருப்பு ஆல்கலைன் தண்ணீரில் நிறைந்துள்ள காரத்தன்மை மற்றும் ஃபுல்விக் கனிமங்களின் கலவையானது, ஆரோக்கியமான குடல் சூழலை ஆதரிக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த
அல்கலைன் நீர் அருந்துவது உடலில் pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இது எலும்புகளிலிருந்து கால்சியம் இழப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
கருப்பு ஆல்கலைனில் உள்ள ஃபுல்விக் தாதுக்களின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நச்சு நீக்கும் பண்புகள், சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இவை சருமத்தின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையை ஆதரிக்கவும், தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
கருப்பு ஆல்கலைன் தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற புதிய பொருள்களை எடுத்துக் கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மீந்து போன சாப்பாட்டில் செய்த மேங்கோ ஃபுட்டிங் அரிசி பூரி! பெப்சி விஜயனின் சூப்பர் ரெசிபி!
Image Source: Freepik