Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Expert

முடியை ஸ்ட்ராங்காக்கும் மூங்கில் இலை.. இதை சரியாக எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ்

கூந்தலுக்கு மூங்கில் இலைகளைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கூந்தலுக்கு மூங்கில் இலைகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகின்றன. இதில், முடி உதிர்வு, முடி உடைதல், நுனிமுடி பிளவு மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இவை முடியின் ஆரோக்கியத்தையும் அமைப்பையும் பாதிக்கின்றன. இதைத் தடுக்க பலரும் விலையுயர்ந்த ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இதற்கு பதிலாக இயற்கை வைத்தியங்கள் பெரும்பாலும் உதவியாக இருக்கும்.

உண்மையில், இவ்வாறு முடிக்கு இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவது அவை மெதுவாக வேலை செய்தாலும், அதன் பலன்கள் சிறப்பாகவும் நீண்ட காலம் நீடிப்பதாகவும் அமைகிறது. மேலும் இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தும்போது, சாத்தியமான தீங்குகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவ்வாறு, நம் முடிக்கு பல வழிகலில் நன்மை பயக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக மூங்கில் இலைகள் அமைகின்றன. இது பல முடி பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

இது குறித்து, ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: பட்டு போன்ற மென்மையான முடி வேணுமா? வீட்டிலேயே கிடைக்கும் இந்த பொருள்களை வைத்து ஹேர் மாஸ்க் செய்யுங்க..

மூங்கில் இலைகள் முடிக்கு எவ்வாறு உதவுகின்றன?

மருத்துவரின் கூற்றுப்படி, தலைமுடிக்கு மூங்கில் இலைகள் மிகவும் திறம்பட செயல்பட உதவுகின்றன. உண்மையில், மூங்கில் இலைகள் பாரம்பரியமாக பல்வேறு கலாச்சாரங்களில் முடி பராமரிப்பு உட்பட அவற்றின் சாத்தியமான நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படக்கூடியதாகும்.

உண்மையில், மூங்கில் இலைகளில் சிலிக்கா உள்ளது. இது முடி, தோல் மற்றும் நக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக இதில் உள்ள சிலிக்கா, முடியை வலுப்படுத்தி அதன் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

மேலும், மூங்கில் சாறு பயன்படுத்துவது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே தான் மக்கள் பெரும்பாலும் மூங்கில் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கஷாயத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

முடி உதிர்தல் மற்றும் மெலிந்து போவதை அனுபவிப்பவர்களுக்கு மூங்கில் இலைகள் மிகவும் உதவியாக இருக்கும். இது முடி அமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகிறது.

தலைமுடிக்கு மூங்கில் இலைகளை பயன்படுத்துவது எப்படி?

  • முடிக்கு மூங்கில் இலைகளைப் பல வழிகளில் பயன்படுத்தலாம். ஆனால், அதன் சாற்றைப் பயன்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • இதற்கு மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுக்கவும், அல்லது சாற்றைப் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • இதை தலைமுடிக்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். உதாரணமாக, இந்த சாற்றில் இருந்து ஒரு ஹேர் மாஸ்க்கை உருவாக்கி அதை உங்கள் உச்சந்தலையில் தடவலாம். மேலும், அதன் சாத்தியமான நன்மைகளைப் பெற, மூங்கில் நீர் அல்லது சாற்றைக் கொண்டு தலைமுடியைக் கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹேர் ஸ்டீமிங்.. முடி வளர்ச்சிக்கான மறைமுக சிகிச்சை..! சரியான முறை, நன்மைகள் அனைத்தும் இங்கே..

  • மேலும், வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த மூங்கில் இலைகளை முடி கழுவுவதற்குப் பயன்படுத்தலாம். இது உச்சந்தலையை சுத்தம் செய்து முடி அமைப்பை மேம்படுத்தும்.
  • உதாரணமாக, நீங்கள் அதை எண்ணெய்களுடன் கலந்து தடவலாம். மூங்கில் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, முடி மசாஜ் செய்யலாம். இந்த வகை மசாஜ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
  • மூங்கில் சாறு நிறைந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் அல்லது முடி சிகிச்சைகளையும் பயன்படுத்தலாம்.

குறிப்பு

தலைமுடி அல்லது உச்சந்தலையில் எந்தவொரு புதிய மூலிகை தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பான, எப்போதும் ஒரு பேட்ச் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் போது அதன் விளைவுகள் மாறுபடலாம். இதில் ஒருவருக்கு எது வேலை செய்கிறது என்பது மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம். அதே சமயம், மூங்கில் தயாரிப்புகள் நம்பகமான மூலங்களிலிருந்து வந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவை பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட முடி பிரச்சினைகளுக்கு நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஷாம்பூவை மாத்துனா மட்டும் முடி உதிர்வு நிக்காது.. இந்த 3 வழிகளை உடனே பின்பற்றுங்க! மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

ஹேர் சீரம் vs ஹேர் ஆயில்.. இது இரண்டிற்கும் என்ன வேறுபாடு தெரியுமா? எப்போது பயன்படுத்துவது நல்லது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 10, 2025 08:44 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content