$
Is Eating Asafoetida Beneficial For Breastfeeding Woman: பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது போல, தாய்ப்பால் கொடுக்கும் போதும் அதே கவனத்தைச் செலுத்துவது அவசியமாகும். இதில் அவர்களது உணவுமுறையைக் கையாள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உண்மையில், கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எதை சாப்பிட்டாலும், அது அவர்களின் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அதன் படி ஒரு பெண் வறுத்த அல்லது காரமான உணவை எடுத்துக் கொள்வதால், குழந்தைக்கு வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை ஏற்படலாம்.
இந்நிலையில் தாய்மார்கள் பெருங்காயம் உட்கொள்கின்றனர். ஆனால், பாலூட்டும் பெண்கள் பெருங்காயத்தை உட்கொள்வது எந்த வகையில் நன்மை பயக்கும். இதில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் பெருங்காயம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இது குறித்து டயட் என் க்யூர் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்த்தால் உங்களுக்கு மட்டுமல்ல! உங்க குழந்தைகளுக்கும் நல்லது
பாலூட்டும் பெண்கள் பெருங்காயம் சாப்பிடலாமா?
உணவுப் பொருள்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களில் ஒன்றாக பெருங்காயம் அமைகிறது. பல ஆண்டுகளாகவே உணவுகளில் அசாஃபோடிடா பயன்படுத்தப்படுகிறது. உணவில் பெருங்காயம் பயன்படுத்துவது வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், பல்வேறு செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற பெருங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால், பாலூட்டும் பெண்கள் பெருங்காயத்தை உட்கொள்ளலமா? வேண்டாமா என்பது குறித்து தெளிவாகக் கூற முடியாது. உண்மையில் தாய்ப்பால் கொடுக்கும் போது பெருங்காயம் உட்கொள்வது நன்மை பயக்கும். அதே சமயம், இதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். ஆனால், ஒவ்வொரு பாலூட்டும் தாய்மார்கள் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனினும், பெருங்காயத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவு ஏற்படுமாயின், அதை உடனடியாக உணவிலிஉந்து நீக்குவது அவசியமாகும்.

பெருங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
கர்ப்ப காலத்தில் பெருங்காயத்தை உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் பலரும் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது குறித்து webmd-ல் குறிப்பிடப்பட்ட ஆய்வு ஒன்றில், பெருங்காயத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என கருதப்படாத ஓர் உறுப்பு உள்ளது. இதை தாய்மார்கள் எடுத்துக் கொள்வதால் அது குழந்தையைச் சென்றடையலாம். ஆனால் இது இரத்தக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பத்தின் போது பெண்கள் அலுவலகத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்!
இது தவிர, பெண்கள் ஏதேனும் ஒவ்வாமை இருப்பின், அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒவ்வாமை உள்ள பெண்களுக்கு பெருங்காயத்தினால் அரிப்பு, வீக்கம் அல்லது தோல் வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், இவை அரிதாகவே காணப்படுகிறது. மேலும், பெருங்காயத்தை அதிகளவு உட்கொள்வதால், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டால் வாந்தி, குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்போது பெருங்காயத்தை உட்கொள்ளலாம்?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தங்கள் உணவில் பெருங்காயத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். எனினும், பெண்கள் தங்கள் உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்வதால், குழந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தினால், பெருங்காயத்தை உட்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தவிர, பெருங்காயத்தை உணவில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ள விரும்பினால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

எனவே புதிய தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் முன்னதாக பெருங்காயத்தை எடுத்துக்கொள்ளும் முன் நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும். இதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Diet: மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
Image Source: Freepik