Nearsightedness: பொருள்களின் உண்மையான வடிவத்தைப் பார்ப்பதில் கண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் யுகத்தில் பணி முதல் பொழுதுபோக்கு வரை அனைத்துக்கும் கண்கள் முக்கியம். கண்களை முறையாக பராமரிப்பது மிக அவசியம். உணவில் ஊட்டச்சத்து குறைபாடு, மொபைல் மற்றும் கணினி முன் மணிக்கணக்கில் செலவிடுவது கண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
இது கிட்டப்பார்வை மற்றும் தூரபார்வை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூரப்பார்வை பிரச்சனையை அறிந்திருக்கும் அளவு பலரும் கிட்ட பார்வை பிரச்சனையை அறிந்திருப்பதில்லை. இதுகுறித்து பார்க்கலாம்.
கிட்டப்பார்வையின் காரணங்கள் என்னவாக இருக்கும்?
இந்த பிரச்சனை ஒரு நபரின் மரபணு காரணங்களால் ஏற்படலாம். அதேசமயம், இது தவிர, வேறு காரணங்களுக்காக ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பிரச்சனைக்கு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மரபணு காரணங்களைத் தவிர, கிட்டப்பார்வை என்பது இளைஞர்களின் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. டிவி, மொபைல், லேப்டாப் போன்றவற்றைப் பார்த்து மணிக்கணக்கில் செலவழிக்கும் குழந்தைகள் கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு அதிகம் இந்த பிரச்சனை ஏற்படலாம், இது அவர்கள் இளமையாக இருக்கும் போது படிப்படியாக சரியாகிவிடும். இந்த பிரச்சனை காரணமாக பொருட்கள் தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால் தொலைதூர பொருட்கள் தெரியும், சற்று மங்கலாக இருக்கும்.
கிட்டப்பார்வை அறிகுறிகள் என்ன?
- தொலைதூர பொருட்களின் மங்கலான பார்வை.
2. தொடர்ந்து தலைவலி.
3. கண்களில் அழுத்தம்.
4. வாகனம் ஓட்டும்போது அல்லது விளையாடும்போது தொலைதூர பொருட்களைப் பார்க்க இயலாமை.
5. வகுப்புப் பலகையில் உள்ள விஷயங்கள் பள்ளியில் தெரிவதில்லை.
6. குழந்தை பொருட்களை முகத்திற்கு அருகில் கொண்டு வந்து பார்க்கிறது.
கிட்டப்பார்வைக்கான சிகிச்சை என்ன?

கிட்டப்பார்வைக்கு அறுவை சிகிச்சை மற்றும் பிற முறைகள் மூலமாகவும் விழித்திரையில் ஒளித்திறனை அதிகப்படுத்தி சிகிச்சையளிக்க முடியும். இதில் கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
லென்ஸ் பயன்பாடுகள்
லென்ஸ் அணிவது இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்கள் கண்ணின் நீளம் அதிகரிப்பை தடுத்து கிட்டப்பார்வைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்ணாடி அல்லது லென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
ஒளிவிலகல் அறுவை சிகிச்சை
ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் தேவையை குறைக்கிறது. கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கார்னியாவை மறுவடிவமைக்க லேசர்களைப் பயன்படுத்துகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகும், நோயாளி சிறிது காலம் கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இது ஒவ்வொரு நோயாளியின் தீவிரத்தை பொறுத்தும் மாறுபடும். இந்த அறுவை சிகிச்சையில், LASIK, LASEK, Photorefractive keratectomy (PRK) மற்றும் சிறிய கீறல் அறுவை சிகிச்சை - Small incision lenticule Extraction (SMILE) ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: Painkiller During Periods: மாதவிடாய் வலி நீங்க மாத்திரையா? இது தெரிஞ்சா நீங்க எடுத்துக்க மாட்டீங்க.
எந்த வித கண் பிரச்சனையையும் அலட்சியப்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு. அறிகுறிகளை உணர்ந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் எந்த பிரச்சனையையும் சரிசெய்ய முடியும்.
Pic Courtesy: FreePik