Rohit Sharma: கொளுகொளுனு இருந்தாலும் ரோஹித் சர்மா போல் வலுவாக இருப்பது ரொம்ப சிம்பிள்!

கொளுகொளுவென அழகாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாகும், சிலருக்கு இயல்பாக இந்த உருவத் தோற்றம் அமையும். ஆனால் இந்த சூழ்நிலையிலும் வலுவாக இருப்பது ரொம்ப எளிது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் ரோஹித் சர்மா போல் இருப்பது எப்படி என பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Rohit Sharma: கொளுகொளுனு இருந்தாலும் ரோஹித் சர்மா போல் வலுவாக இருப்பது ரொம்ப சிம்பிள்!

Rohit Sharma: சிலர் கொளுகொளு என அழகாக இருப்பார்கள், உடலை குறைக்கிறோம் என நினைத்து தங்கள் அழகையே கெடுத்துவிடுவார்கள். சிலர் அழகாக Chubby ஆக இருப்பார்கள், கன்னம் எல்லாம் கொளுகொளு என இருக்கக் கூடும், அதே சமயத்தில் உடல் ஓரளவு மெலிந்து தான் இருக்கக் கூடும். ஆனால் முகம் கொளுகொளுவென இருக்கும். இவை அனைத்தும் இருந்தாலும், வலுவாக இல்லாமல் அனைத்து இடத்திலும் பேலன்ஸ் செய்ய முடியாத நிலை இருக்கும்.

ரோஹித் சர்மா சிறந்த உதாரணம்

Chubby ஆக இருந்தாலும் வலுவாக இருப்பது ரொம்ப எளிது. இதற்கு சிறந்த உதாரணம் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மா என்னதான் கொளுகொளுவென இருந்தால் வேலையில் புலியாக இருப்பார். இதுவரை ரோஹித் சர்மாவின் உடல் தகுதி குறித்து எந்த கேள்வியும் இருந்தது இல்லை.

பயனுள்ள மற்றொரு தகவல்: தினமும் மதிய உணவுக்கு முன் 3 பூண்டு பற்களை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

அதற்கு காரணம் அவரது வலுவான நிலைதான். தெறிக்கவிடும் சிக்ஸ், பேட்டில் மாட்டிவிட்டால் 100 தான். எத்தனை ரன் ஓடி எடுத்தாலும் ஓய்வும் தொய்வும் இல்லாத தொடர் செயல்பாடு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

rohit sharma diet plan

சாப்பாட்டு முறையில் கவனம் தேவை

  • புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்ட உணவை உண்ணுங்கள்.
  • சரிவிகித உணவை உண்பது உடலுக்கு மிக அவசியம். பிடித்த உணவை எவ்வளவு சாப்பிட்டாலும் அது ஆரோக்கியமான உணவுதான் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • வெளிப்புற உணவுகளை சாப்பிடக் கூடாது. வீட்டில் சமைத்த உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • செரிமானத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

தினசரி நிலையான வாழ்க்கை முறை

  • ஓரிரு நாட்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு பின் அதை கைவிட்டு பின் மீண்டும் தொடர்வது என்பது சரியல்ல.
  • ஆர்வத்தில் ஒரு வாரம் உடற்பயிற்சி செய்துவிட்டு அடுத்து அதை அப்படியே கைவிடுவது என்பது சுத்தமாக பலன் தராது.
  • ஒருமுறை ஆரோக்கியமான முறையை கடைபிடித்துவிட்டால் அதையே வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
rohit sharma hand power tips

சாப்பாட்டு இடைவெளி முக்கியம்

  • கிடைக்கும் போதெல்லாம் உணவு உண்ணக் கூடாது.
  • உணவு சாப்பிடும் போது சீரான இடைவெளி எடுக்க வேண்டியது முக்கியம்.
  • காலை, மதியம், இரவு என உணவு உண்ண வேண்டும்.
  • காலை எழுந்தவுடன் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
  • காலையில் பால் டீ, காபிக்கு பதிலாக ஆரோக்கியமான மூலிகை பானம் மட்டுமே குடிக்க வேண்டும்.
  • மாலை தேவைப்பட்டால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்

உங்கள் உணவில் நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், நெய், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: இந்த பிரச்சினை உள்ளவர்கள் மறந்து கூட மதியம் தூங்க கூடாதாம்! ஏன் தெரியுமா?

ரோஹித் சர்மா போல் இருக்க வேண்டுமா?

மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக முக்கியம். எப்போதும் ஸ்டாமினா என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். உடல் எப்படி இருந்தாலும், நம் உடல் தகுதி, பலம் என்பது நமது வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில் என்பதை மறக்க வேண்டாம்.

image source: Meta AI

Read Next

Hot Water Benefits: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..

Disclaimer