யாராவது கோபப்படுத்தும் போதும் "அன்பே சிவம்" கமல் போல் சிரிச்சுக்கிட்டே இருப்பது எப்படி?

உங்களை யாராவது கோபப்படுத்த முயலும் போது அன்பே சிவம் கமல் சிரித்துக் கொண்டே இருப்பது எப்படி என்பதை இந்த காலக்கட்டத்தில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம்.
  • SHARE
  • FOLLOW
யாராவது கோபப்படுத்தும் போதும் "அன்பே சிவம்" கமல் போல் சிரிச்சுக்கிட்டே இருப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பைப் பற்றியும், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதிலும், குடும்ப சுமையாலும், பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் உடல்நலன் குறித்தும், முதியவர்கள் தங்களுன் பிள்ளைகள், பேரன்கள், உடல்நலம் குறித்தும் என பலர் பல்வேறு மனநல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்கள் வாழ்க்கையில் சில மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். ஆனால் உங்கள் பிரச்சனையை மீண்டும் மீண்டும் சிந்திப்பது மன அழுத்த சூழ்நிலையை உங்களுக்கு மேலும் அழுத்தமாக மாற்றும். எனவே, மன அழுத்தத்தை புறக்கணிப்பதற்கு பதிலாக அதை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

யாராவது உங்களை தூண்டிவிடும் போது மகிழ்ச்சியாகவும் சிரித்துக் கொண்டே இருப்பதும் எப்படி?

இதெல்லாம் ஒருபுறம் என்றால் இந்த காலக்கட்டத்தில் பலர் மிக எளிதாக ஒருவரை தூண்டிவிட்டு கோபப்படுத்த முயலுவார்கள். ஒருவர் ஒருவரை கேலி செய்யும் போதும், மேனேஜர் நம்மை திட்டும் போதும் அதை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சிலர் எளிதாக சிரித்து விட்டே நம்மை கோபமடைய செய்து அவர்களிடம் சண்டையிடச் செய்வார்கள்.

இதை படிக்க மிஸ் பண்ணாதிங்க: தினமும் காலையில் மூலிகை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

இந்த காலக்கட்டத்தில் பலர் பல்வேறு வகையில் ஒருவரை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறார்கள். இதை சரிசெய்வது எப்படி என பார்க்கலாம்.

ஆழ் மனதை சிந்திக்க வையுங்கள்

உடனிருக்கும் நபர்கள் யார் யார் எப்படி என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்களின் குணாதிசியங்களை கட்டாயம் அறிந்து வையுங்கள். அனைவரும் அப்படிதான் என கூறிவிட முடியாது, ஆனால் உங்களுடன் இருக்கும் சிலரே இந்த வேலையை பார்க்கலாம்.

angry reduce tips

கோபப்படுத்த முயலும் போது சிரிப்பது எப்படி?

  • எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களிடம் நேரடியாக கோபப்படுவர்கள் எவ்வளவோ மேலானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • காரணம் ஒருவர் உங்களை மறைமுகமாக கோபப்படுத்த முயலுகிறார்கள் என்றால் அவர்களைவிட மேலானவர்கள் உங்களிடம் நேரடியாக விஷயங்களை பேசுபவர்கள்.
  • யாராவது நம்மை தூண்டிவிடுகிறார்கள் என்று கண்டறிந்தால் அவருக்கு அதற்கு முயலும் போது உங்கள் சிந்தனையை வேறு இடத்தில் வையுங்கள். உங்களுக்கு பிடித்தமான நபரையோ, விஷயத்தையோ, இடத்தையோ சிந்தியுங்கள்.
  • தூண்டிவிட முயலும் நபரின் எண்ணத்தை நினைத்து அவருடன் ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவு மேலானவர்கள் என நினையுங்கள்.
  • ஒருவர் உங்களை தூண்டிவிட முயற்சிக்கும் போது என்றோ ஒருநாள் இது அவருக்கும் நடக்கும் அப்போது இதன் பாதிப்பு அவருக்கு தெரியும் என நினைத்து விலகிச் செல்ல முயலுங்கள்.
  • அத்தகைய நபரை கண்டறிந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் எச்சரிக்கையாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தம் இருக்கும் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வழிகள்

மன அழுத்தம் என்பது இந்த காலக்கட்டத்தில் பொதுவானதாக மாறிவிட்டது. மன அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும் நிலையாக பலருக்கு மாறிவிட்டது. இதனால்தான் கோபம், சண்டை, பகை எல்லாம் வருகிறது. இதை நீக்கினாலே வாழ்க்கையில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

how to smile always

ஓய்வு எடுக்க வேண்டியது மிக அவசியம்

பிஸியான வாழ்க்கை முறையால், உங்களுக்காக நேரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் மீண்டும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் சிக்கிக்கொள்ளலாம்.

எனவே, மன அழுத்தம் தொடங்கும் போதெல்லாம், ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இதைச் செய்ய, உங்கள் சுற்றுப்புறத்தைச் சுற்றி உலாவலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம்.

பிரச்சனை பற்றி யோசிக்க வேண்டாம்

மீண்டும் மீண்டும் பிரச்சனை பற்றி யோசிப்பது உங்கள் கவலையை மேலும் அதிகரிக்கலாம். எனவே பிரச்சனையைப் பற்றி சிந்திக்காமல், உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.

அத்தகைய சூழ்நிலையில், உங்களை ஊக்குவிக்கும் விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

how to smile always

நடைமுறையில் இருக்க முயற்சி செய்யுங்கள்

பெரும்பாலும் மக்கள் தங்கள் உணர்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறார்கள். இதன் காரணமாக, மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் நீங்கள் அமைதியற்றதாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.

மன அழுத்தத்தின் போது நீங்கள் நடைமுறையில் இருக்க முயற்சிக்க வேண்டும்.

சுவாச பயிற்சிகள் செய்யுங்கள்

பதட்டமாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, நமது இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனித்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நாம் அமைதியின்மை மற்றும் பதட்டத்தை உணர ஆரம்பிக்கிறோம்.

இதற்காக நீங்கள் சுவாச பயிற்சிகளை முயற்சி செய்யலாம். இது உங்களை அமைதிப்படுத்த உதவும்.

இயற்கை உடன் சிறிது நேரம் செலவிடுங்கள்

மன அழுத்த சூழ்நிலையிலிருந்து வெளிவர இயற்கையுடனே நேரத்தை செலவிடுவதே சிறந்த வழியாகும். இதன் மூலம் நீங்கள் நன்றாக உணர முடியும் மற்றும் உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முடியும். எனவே, உங்கள் நேரத்தை ஒதுக்கி இயற்கையில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

இதையும் படிங்க: Pori Mixture: வெறும் பொரி சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ இப்படி செஞ்சி சாப்பிடுங்க!

நெருங்கிய ஒருவரிடம் பேசுங்கள்

உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்கள் பிரச்சினைகளை உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அமைதியை தரும், மேலும் உங்கள் பிரச்சனையிலிருந்து படிப்படியாக வெளியே வர முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், சக ஊழியர்களுக்கும் பகிர முயலுங்கள்.

pic courtesy: freepik

Read Next

Mood swing control tips: மூட் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த உங்களுக்கு சூப்பர் டிப்ஸ் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்