Skin Tightening: மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறை உள்ளிட்ட காரணங்களால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் பிரதான ஒன்று முன்கூட்டியே வயதாகுதல். முன்பெல்லாம் 50 வயதுக்கு மேல்தான் மனிதர்கள் வயதாகும் பிரச்சனையை எதிர்கொண்டார்கள். ஆனால் இப்போது இந்த வயது மூப்பு பிரச்சனை என்பது இளம் வயதிலேயே வரத் தொடங்கிவிட்டது.
முன்கூட்டிய வயது மூப்பு பிரச்சனை காரணமாக தோல், சருமம் தொங்கிவிடத் தொடங்கிறது. இதுமட்டும் காரணமா என்றால் அதுதான் இல்லை, சிலர் உடல் பருமனாக இருந்து ஒல்லியாக மாறுவார்கள். என்னதான் உடலை குறைத்தாலும் முகம் மற்றும் கழுத்து தொங்கிய நிலையில் பருமனாக இருக்கும். சிலர் மெலிந்தே இருந்தாலும் முகம் மற்றும் கழுத்து மட்டும் பருமனாக இருக்கும்.
மேலும் படிக்க: Goosebumps Feel: புல்லரித்து முடிகள் எழவும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கவும் காரணம் இதுதான்.. அறிவியல் உண்மை
முகம் மற்றும் கழுத்து பருமனாக இருக்கிறதா?
முகம் மற்றும் கழுத்து பருமனாக இருப்பது மொத்த முக அழகையே கெடுக்கும் விதமாக இருக்கும். பலருக்கு முகத்தில் சதை அதிகமாக இருப்பதால் தான் நம் முகம் விகாரமாக இருக்கிறது என்பதையே அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு முறை கூட முகத்தில் சதையில்லாமல் ஃபிட்டாகவும், கழுத்து தொங்கியபடி இல்லாமல் பார்க்காதவர்கள் இங்கு ஏராளம்.
முகம் அழகாக தோன்ற என்ன செய்வது?
இதில் ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்ல முடியும், முகத்தில் தொங்கிய சதை இல்லாமலும், கழுத்து தொங்கியபடி இல்லாமல் ஒட்டியபடியும் இருந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பலரை உடன் இருப்பவர்களே என்னடா மூஞ்சியில் தொப்பை வைத்திருக்க என கேலி செய்திருப்பார்கள். இவை அனைத்துக்குமான தீர்வை பார்க்கலாம்.
முகத்தில் சதையை குறைத்து இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும்?
தோல் பராமரிப்பு வழக்கத்தில் ரெட்டினோலைச் சேர்க்கவும்
- ரெட்டினோல் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும், அதன் உறுதியையும் மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.
- கூடுதலாக, அது சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. சருமத்தை இறுக்கமாக்க இரவில் ரெட்டினோல் சார்ந்த கிரீம்களைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் உங்கள் சருமத்திற்கு படிப்படியாகவே ரெட்டினோலை சேர்க்க வேண்டும்.
- உங்கள் சருமம் இதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மெதுமெதுவாக ரெட்டினோலை சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
- வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது.
- வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இதன் மூலம் சருமத்தை இறுக்க பெரும் உதவியாக இருக்கிறது.
- வைட்டமின் சி நிறைந்த சீரம் அல்லது க்ரீமை தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தை பளபளப்பாகவும் இறுக்கமாகவும் மாற்றும்.
- இது சருமத்தின் நிறத்தை சமன் செய்து, சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்க பெரும் உதவியாக இருக்கும்.
முகப் பயிற்சிகள் செய்வது முக்கியம்
- முகப் பயிற்சிகள் சருமத்தை இறுக்கமாக்க உதவுகின்றன.
- முக தசைகள் உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் அதன் நெகிழ்ச்சித் தன்மையையும் அதிகரிக்கிறது.
- இந்தப் பயிற்சிகளை தினமும் சில நிமிடங்கள் செய்வது நீண்ட காலத்திற்கு சிறந்த பலன்களைத் தரும்.
ஹைலூரோனிக் அமிலம் சார்ந்த மாய்ஸ்சரைசர்
- ஹைலூரோனிக் அமிலம் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
- இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
- ஹைலூரோனிக் அமிலமானது சருமத்தை இறுக்க பயன்படுவதோடு பளபளப்பாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது.
- இதன் வழக்கமான பயன்பாடானது சுருக்கங்களைக் குறைத்து ஈரப்பதத்தை வழங்குகிறது.
- சருமம் வறண்டு அல்லது தளர்வாகிவிட்டால், ஹைலூரோனிக் அமிலம் கொண்ட மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கக்கூடும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது
- சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
- சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களைத் தவிர்க்க, சூரிய ஒளியில் வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது மிக நல்லது.
- சூரியனின் புற ஊதா கதிர்களானது சருமத்தை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் நெகிழ்ச்சித் தன்மையை இழக்க வைக்கும். மேலும் இது சருமத்தின் வயதான அறிகுறிகளை மோசமாக்கக் கூடும்.
மேலும் படிக்க: வெயில் காலத்தில் உடல் சூட்டையும் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்த இந்த பானங்களை குடியுங்க!
கற்றாழை பயன்படுத்துவது சருமத்திற்கு சிறந்த தீர்வு
- சருமத்தின் பல பாதிப்புகளை போக்குவதற்கு கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கற்றாழை ஜெல் பயன்படுத்தும் போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மை அதிகரிக்கிறது.
- மேலும் கற்றாழை ஜெல் சருமத்தை இறுக்கமாக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.
- கற்றாழை ஜெல்லை, ஜாதிக்காய், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு ஆகியவற்றுடன் கலந்து தடவுவது கூடுதல் நன்மைக்கு வழிவகுக்கும்.
image source: freepik