$
Toxins: ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் உடலில் அதிகப்படியான நச்சுகளை ஏற்படுத்துகின்றன.
உடலில் நச்சுகளின் அளவு அதிகரிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடல் கொழுப்பு அதிகரித்து, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: Hot Water Bath: வெந்நீரில் குளிக்கும் போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
உடல் நச்சுக்கள் நமது இரத்தத்தில் நச்சுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் உடலின் பிற முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. ஒரு நபரின் உடலில் நச்சுகளின் அளவு அதிகரித்திருந்தால், அதைப் பற்றி எப்படி தெரிந்துகொள்வது என்று மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் போது, பல அறிகுறிகள் உடலில் காணப்படுகின்றன.
உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா இன்ஸ்டாகிராம் பதிவில் உடலில் நச்சுகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் மற்றும் நச்சுகளை அகற்றுவதற்கான வழிகளைப் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
உடலின் நச்சுத்தன்மை அறிகுறிகள்

மலச்சிக்கல்
தொடர்ந்து 2-3 நாட்களுக்கு உங்கள் வயிற்றை காலி செய்வதில் சிரமம் இருந்தால், அது மலச்சிக்கல் காரணமாக இருக்கலாம். இது உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுகள் இருப்பதைக் காட்டுகிறது.
சோர்வு
காரணமே இல்லாமல் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், அது உடலில் உள்ள அதிகப்படியான நச்சுகளின் காரணமாக இருக்கலாம்.
குடல் தொடர்பான சிக்கல்கள்
நீங்கள் சாப்பிட்ட பிறகு வயிற்றில் வீக்கம், வாயு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், அது உங்கள் உடலில் நச்சுகளின் அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
மூளை பிரச்சனை
உங்களுக்கு கவனம் செலுத்துவதிலும் சிக்கல் இருந்தால், நீங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.
கண் வீக்கம்
கண்களின் கீழ் வீக்கம் இருந்தாலோ, அத்துடன் நீர் திரட்சி ஆகியவற்றை நீங்கள் கவனித்தால், அது உடலில் நச்சுகள் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவது எப்படி?

ஸ்பெஷல் பீட்ரூட் ஜூஸ்
1 சிறிய பீட்ரூட், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள், அரை தேக்கரண்டி மஞ்சள், 1 ஆம்லா, 1 தேக்கரண்டி துளசி விதைகள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் கல் உப்பை எடுத்து சிறிய பாத்திரத்தில் போட்டு கலக்கவும். இதை அனைத்தையும் அரைத்து சிறிய பேஸ்ட் போல் உருவாக்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி சாறு எடுக்கவும். காலை 11 மணிக்கு மேல் இதை குடிக்கலாம்.
விரதம் இருப்பது நல்லது
12 முதல் 14 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது உடலை இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இது உடலில் உல்ள நச்சுக்களை வெளியேற்ற பெருமளவு உதவும்.
எலுமிச்சைப்பழம்
ஒரு நாளைக்கு ஒரு முறை எலுமிச்சை நீரை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை உடல் நச்சுக்களை அகற்ற பெருமளவு உதவும்.
டீ, காபி உட்கொள்வதை தவிர்க்கவும்
காஃபின் நிறைந்துள்ள டீ மற்றும் காபி போன்ற பானங்கள் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை மட்டும் குடிப்பது நல்லது.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
புளிப்பு நிறைந்த உணவுகள்
தயிர், புளித்த தோசை போன்ற ப்ரோபயோடிக்குகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் நச்சுக்களை நீக்க பெருமளவு உதவும்.
Image Source: FreePik