உடல் எடை அதிகரிப்பது என்பது பெரும்பாலானோரால் அழகு சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் எடை கூடுவது என்பது, நீரழிவு, இதய நோய், ரத்த அழுத்தம், ஏன் சில வகை கேன்சர்களுக்கு கூட காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக முக்கியமானது. இதற்கு கடுமையான உடற்பயிற்சி மட்டும் போதாது சரியான உணவுக்கட்டுப்பாடும் அவசியம். வேகமாகவும், சீராகவும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சில ஆயுர்வேத வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவக்கூடிய உணவுப்பொருட்களில் எலுமிச்சையும் ஒன்று. இதிலுள்ள வைட்டமின் சி எடை குறைப்பிற்கு உதவுகிறது.
எலுமிச்சை எடையிழப்பிற்கு உதவுமா?
அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வாங்கக்கூடிய மலிவு விலை பழமான எலுமிச்சையில், வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. நடுத்தர அளவிலான எலுமிச்சை பழத்தில் 53 கிராம் அளவிற்கு வைட்டமின் சி உள்ளது.

இது உடல் எடையைக் குறைக்கவும், தொப்பைக் கொழுப்பைக் கரைக்கவும், சருமம் மற்றும் முடி அழகை பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக எலுமிச்சையை சரியான வழியில் பயன்படுத்தினால் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
எலுமிச்சையை எப்படி பயன்படுத்தினால் எடை குறையும்?
ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் விரல் அளவுள்ள இஞ்சியை நசுக்கி சேர்த்துக்கொள்ளவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். முதலில் ஒரு டம்பளர் அளவுள்ள நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். அதன் பின்னர் நாள் முழுவதும் சிறிது, சிறிதாக குடிக்கவும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதற்கு பதிலாக காலை உணவுக்குப் பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து குடிக்கலாம். அதன் பின்னர் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பருகலாம். மதிய உணவுக்கு முன் இதை உட்கொள்ளலாம். அதில் இனிப்பு அல்லது உப்பு சேர்க்க வேண்டாம்.
எலுமிச்சை தண்ணீரின் பிற நன்மைகள்:
உடல் எடையிழப்பிற்கு மட்டுமல்ல, எலுமிச்சை தண்ணீர் நல்ல டீடாக்ஸ் பானமாகவும் செயல்படுகிறது. இது வயிற்றில் உள்ள நச்சுக்களை சிறுநீர் அல்லது மலம் வழியாக வெளியேற்றுகிறது.
சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்க இது நல்லது. இது நம் உடலுக்கு வைட்டமின் சியின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் தோல் மற்றும் கூந்தலுக்கு ஏற்ற எலுமிச்சை டெக்னிக் இது.
எப்போது செய்யக்கூடாது?
இதை ஒவ்வொரு மாதமும் செய்யாதீர்கள். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு எலுமிச்சையில் பாதி போதும். இது உடல் எடையை குறைக்க மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. இதை ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளலாம். இல்லையெனில், வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
வெர்டிகோ, பி.பி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்யக் கூடாது. இந்த பானத்தை பருகியதும், ஏதாவது ஒரு உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும்.
Image Source: Freepik