Coconut milk brinji biryani recipe: இன்று பலரும் ஆரோக்கியத்தைத் தாண்டி, ருசியான உணவையே விரும்புகின்றனர். இதன் காரணமாகவே பலரும் ஃபாஸ்ட் புட் மீது அதீத நாட்டம் கொண்டுள்ளனர். ஆனால், இதில் பயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள், சில இரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கலாம். எனவே பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே சில ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.
தேங்காய் பால் பிரிஞ்சி பிரியாணி செய்வது எப்படி?
தேங்காய் பால் பிரிஞ்சி பிரியாணியை எளிதான முறையில் எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.
தேவையானவை
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கிராம்பு – 2
- பிரியாணி இலை – 1
- பட்டை – 1
- ஏலக்காய் – 1
- ஸ்டார் சோம்பு – 1
இந்த பதிவும் உதவலாம்: Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1
- புதினா, மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
- பீன்ஸ் – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
- கேரட் – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
- உருளைக்கிழங்கு – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
- மீல் மேக்கர் – ஒரு கப்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
- மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
- பச்சை பட்டாணி – ஒரு கப்
- தேங்காய்ப்பால் – ஒன்றரை டம்ளர்
- தயிர் – அரை கப்
- கரம் மசாலா – அரை ஸ்பூன்
- பாஸ்மதி அரிசி – ஒரு கப்
- பிரட் துண்டுகள் – 4
- எலுமிச்சை – அரை
- உப்பு – தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Andhra Mutton Biryani: ஆஹா பிரியாணினா இப்படி இருக்கணும்… ஆந்திரா ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்முறை!
தேங்காய் பால் பிரிஞ்சி பிரியாணி செய்முறை
- முதலில் குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துக் கொண்டு சூடாக்க வேண்டும். பின், இதில் பட்டை, கிராம்பு, சோம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் போன்றவற்ரைச் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- அதன் பிறகு, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கலாம். இதனைத் தொடர்ந்து இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கலாம். பிறகு தக்காளி சேர்த்து மசித்து வேகவைக்க வேண்டும். அடுத்ததாக, ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கலாம்.
- பிறகு இதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் ஊறவைத்து பிழிந்த மீல் மேக்கர் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின், இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள், தயிர் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
- இதனைத் தொடர்ந்து, 20 நிமிடங்கள் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதி வர விட வேண்டும். பின் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து இறக்கி வைக்கலாம். இதில் நாம் வழக்கமாக பிரியாணியை வேக வைக்கும் படி செய்து கொள்ளலாம்.
- மற்றொரு கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து பிரட்டை சிறிய துண்டுகளாக பொரித்து எடுத்துக் கொள்ளலாம். பிறகு இதை குக்கர் விசில் ரிலீஸ் ஆன பிறகு, இந்த பிரட் துண்டுகளைச் சேர்த்து மூடி வைக்க வேண்டும். பின் இதில் கொத்தமல்லி இலை தூவி கலந்து எடுத்தால், சூப்பரான சுவையான தேங்காய்ப்பால் பிரிஞ்சி பிரியாணி தயாராகி விடும்.
- இதற்கு வெள்ளரி ரைத்தா சேர்த்து பரிமாறலாம். மேலும் இதனுடன் காளான், பன்னீர், காலிஃபிளவர் 65, காய்கறி குருமா அல்லது அசைவ கிரேவி சேர்த்தும் தயார் செய்யலாம்.
இவ்வாறு சூப்பரான மற்றும் சுவையான தேங்காய் பால் பிரிஞ்சி பிரியாணியை எளிதான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mushroom Donne Biryani: பெங்களூர் ஸ்பெஷல் காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்யணும் தெரியுமா?
Image Source: Freepik