Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Doctor Verified

World Diabetes Day 2025: கர்ப்பிணிகளே கவலை வேண்டாம்.. நீரிழிவு நோயை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் இதோ..

World Diabetes Day 2025 சிறப்புப் பதிவாக நீரிழிவு நோய் உள்ள பெண்கள் பாதுகாப்பான கர்ப்பம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை நிபுணர்களிடம் இருந்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

நீரிழிவு நோயுடன் வாழ்வதே ஒரு சவாலான பயணம். அதற்குப் பிறகும் கர்ப்பம் என்கிற மிகப்பெரிய பொறுப்பு வந்தால், கூடுதல் கவனமும், திட்டமிடலும் அவசியமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி World Diabetes Day கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நீரிழிவு உள்ள பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பம் பெற உதவும் விழிப்புணர்வுக்கும் ஆதரவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. Onlymyhealth-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அபோலோ Fertility, மும்பை - மகப்பேறு மற்றும் கருத்தரிப்பியல் நிபுணர் Dr. அங்குஷ் ரவுத், கர்ப்ப கால நீரிழிவை எப்படி சமாளிக்கலாம் என்பதை விரிவாக பகிர்ந்தார்.

ஏன் கர்ப்ப காலத்தில் நீரிழிவு அதிக கவனம் தேவை?

கர்ப்பத்தில் உடலின் ஹார்மோன்கள் மாறுவதால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை மேலாண்மை சிரமமாகும். சர்க்கரை அளவு சரியாக கட்டுப்படுத்தப்படவில்லை எனில், முன்கூட்டிய பிரசவம், குழந்தையின் அதிக எடை, கருக்கலைப்பு, குழந்தையில் பிறப்பு குறைபாடு போன்ற ஆபத்துகள் அதிகரிக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஆரோக்கியமான கர்ப்பத்துக்கான 5 முக்கிய குறிப்புகள்

1. கர்ப்பம் ஏற்பதற்கு முன் சரியான திட்டமிடல்

கர்ப்பம் ஏற்பதற்கு முன்பே நீரிழிவு உள்ள பெண்கள் எண்டோக்ரினாலஜிஸ்ட் மற்றும் மகப்பேறு நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும். “குறைந்தது 3–6 மாதங்கள் சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரித்த பிறகு கர்ப்பத்திற்குத் திட்டமிடுவது சிறந்தது,” என்று Dr. ரவுத் கூறுகிறார்.

* சில நீரிழிவு மாத்திரைகள் கர்ப்பத்தில் தவிர்க்கப்பட வேண்டும்

* இன்சுலின் சிகிச்சை பலருக்கு சிறந்த விருப்பமாக இருக்கலாம்

* ஃபோலிக் ஆசிட் தொடக்கம் மிக அவசியம்

2. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு – கர்ப்பத்தின் முதன்மை இலக்கு

கர்ப்பத்தின் போது இரத்த சர்க்கரையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் இலக்குகள்:

* காலை வெறும் வயிறு சர்க்கரை: 95 mg/dL கீழ்

* உணவுக்குப் பிறகு: 120–140 mg/dL

முதல் trimester-ல் சர்க்கரை அதிகமாக இருந்தால், குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: World Diabetes Day 2025: இந்த ஆண்டு நீரிழிவு தினத்திற்கான கருப்பொருள் என்ன? வரலாறு, முக்கியத்துவம் அனைத்தும் இங்கே..

3. உணவில் சரியான திட்டம் – சிறந்த பாதுகாப்பு

உணவகட்டுப்பாடு கர்ப்ப கால நீரிழிவின் முதன்மை சிகிச்சை. நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவு:

* ஓட்ஸ்

* பருப்பு வகைகள்

* பழுப்பு அரிசி

* நட்ஸ்

* பச்சை காய்கறிகள்

சிறு சிறு அளவில் அடிக்கடி உண்பது சர்க்கரை ஏற்றத்தாழ்வை தவிர்க்க உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் – முழுமையாக தவிர்க்க வேண்டும்.

4. பாதுகாப்பான உடற்பயிற்சி அவசியம்

உடலுக்கு தீங்கு இல்லாத லைட் எக்சர்சைஸ் முக்கியம்:

* நடைபயிற்சி

* பிரசவத்திற்கு முந்தைய யோகா

* நீச்சல்

“உடற்பயிற்சி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதிகமாக உழைக்கும் பயிற்சிகளை தவிர்க்கவும். உடற்பயிற்சி முன்/பின் சர்க்கரை பரிசோதிக்கவும் என்று Dr. ரவுத் கூறுகிறார்.

5. சுகாதார கண்காணிப்பு – தாய் & குழந்தை இருவருக்கும் பாதுகாப்பு

நீரிழிவு உள்ள பெண்களுக்கு கீழ்க்கண்ட பரிசோதனைகள் அவசியம்:

* இரத்த அழுத்தம் கண்காணிப்பு

* வழக்கமான அல்ட்ராசவுண்ட்

* கரு வளர்ச்சி கண்காணிப்பு

* சிறுநீரக பரிசோதனை

* கண் பரிசோதனை

“எண்டோக்ரினாலஜிஸ்ட், மகப்பேறு நிபுணர், கர்ப்பிணிகள் — மூவரும் இணைந்து செயல்பட்டால், கர்ப்பம் வெற்றிகரமாக முடியும்,” என்று நிபுணர் கூறுகிறார்.

இறுதியாக..

நீரிழிவு உள்ள பெண்களும் பாதுகாப்பான, ஆரோக்கியமான கர்ப்பத்தை பெற முடியும். அதன் ரகசியம் — முன்கூட்டியே திட்டமிடல், சர்க்கரை கட்டுப்பாடு, சரியான உணவு, உடற்பயிற்சி, மற்றும் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு. நிபுணர்கள் கூறுவது: "Consistency is the key."

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. நீரிழிவு, கர்ப்பம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Read Next

World Diabetes Day 2025: இந்த ஆண்டு நீரிழிவு தினத்திற்கான கருப்பொருள் என்ன? வரலாறு, முக்கியத்துவம் அனைத்தும் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 14, 2025 10:41 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content